iPhone 13 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி

பிளிப்கார்ட்டில் ஐபோன் 13க்கு சிறப்புத் தள்ளுபடி உள்ளது. நீங்கள் ஐபோன் 13 ஐ வாங்க திட்டமிட்டு இருந்தால், இதுவே சரியான வாய்ப்பு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2022, 02:06 PM IST
  • பிளிப்கார்ட்டில் ஐபோன் 13க்கு சிறப்புத் தள்ளுபடி உள்ளது.
  • ஐபோன் 13 128 ஜிபி சேமிப்பு மாறுபாடு ரூ.74,900க்கு கிடைக்கிறது.
  • சலுகைகளைப் பெறுவதன் மூலம், ஐபோன் 13 ஐ ரூ.55,400க்கு பெறலாம்.
iPhone 13 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி title=

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 தொடரை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த போனுக்கு மக்கள் மத்தியில் அதிக மவுசு. அதன்படி ஐபோன் 13 128ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாடு இன் ஒரிஜினல் விலை ரூ.ரூ.79,900 ஆகும். ஆனால் பிளிப்கார்ட் இல் ஐபோன் 13 இல் சிறப்பு தள்ளுபடி உள்ளது. நீங்கள் ஐபோன் 13 ஐ வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே சரியான வாய்ப்பாக இருக்கும். வங்கி மற்றும் பரிமாற்றச் சலுகைகளைப் பெறுவதன் மூலம், ஐபோன் 13 மலிவான விலையில் வாங்க முடியும்.

ஐபோன் 13 சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
ஐபோன் 13 128ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் தொடக்க விலை ரூ.79,900 ஆகும், ஆனால் இந்த போன் பிளிப்கார்ட் இல் ரூ.74,900க்கு கிடைக்கிறது. அதாவது போனில் 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த போனில் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது, இது தொலைபேசியின் விலையை இன்னுமும் குறைக்கும்.

மேலும் படிக்க | Redmi Note -ன் புதிய 4ஜி, 5ஜி ஸ்மார்ட்போன்கள்...! சிறப்பம்சம், விலை பட்டியல் இதோ

ஐபோன் 13 வங்கிச் சலுகைகள்
ஐபோன் 13 இல் 10 சதவீதம் உடனடி கேஷ்பேக் கிடைக்கிறது. நீங்கள் கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம், எஸ்பிஐ பே, பீம் யுபிஐ, ஆக்சிஸ் பே, சாம்சங் பே அல்லது மொபிக்விக் மூலம் யுபிஐ கட்டணம் செலுத்தினால், உங்களுக்கு ரூ. 1000 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனின் விலை ரூ.73,900 ஆக இருக்கும். அதன் பிறகு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இதில் உண்டு.

ஐபோன் 13 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
ஐபோன் 13 இல் ரூ.18,500 எக்ஸ்சேஞ்ச் ஆஃப் உள்ளது. பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் இந்த பம்பர் தள்ளுபடி கிடைக்கும். ஆனால் உங்கள் பழைய போனின் கண்டிஷன் நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருந்தால் மட்டுமே ரூ.18,500 தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் முழுமையாக சலுகையை பெற முடிந்தால் ஐபோன் 13 ஐ ரூ.55,400க்கு வாங்கலாம்.

மேலும் படிக்க | ப்ளிப்கார்ட்டில் ரூ.499-க்கு Samsung 5G ஸ்மார்ட்போன்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News