SIM Card விதிகளில் பெரிய மாற்றம்: இதை செய்யவில்லை என்றால் ரூ. 10 லட்சம் அபராதம்

SIM Cards: சிம் கார்டு புதிய விதிகள் என்ன? இதன் பிறகு என்ன மாற்றங்கள் இருக்கும்? இவை அனைத்தை பற்றியும் இந்த பதிவில் விரிவாக காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 4, 2023, 10:16 AM IST
  • புதிய விதி அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
  • விற்பனையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • சிம் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?
SIM Card விதிகளில் பெரிய மாற்றம்: இதை செய்யவில்லை என்றால் ரூ. 10 லட்சம் அபராதம் title=

சிம் கார்டு, சமீபத்திய புதுப்பிப்பு: மொபைல் போன் பயனர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இப்போது புதிய சிம் கார்டை வாங்கும் மற்றும் செயல்படுத்தும் (ஆக்டிவேட் செய்யும்) செயல்பாட்டில் இன்னும் சில சிரமங்கள் இருக்கலாம். புதிய சிம் கார்டுகளுக்கான கடுமையான விதிகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. செயல்முறை பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் இருப்பதை உறுதிசெய்ய இந்த விதிகளை அரசு கடுமையாக்கியுள்ளது. நாடு முழுவதும் சிம் கார்டுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தொலைத்தொடர்புத் துறை (DoT) இரண்டு சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. புதிய விதிகள் என்ன? இதன் பிறகு என்ன மாற்றங்கள் இருக்கும்? இவை அனைத்தை பற்றியும் இந்த பதிவில் விரிவாக காணலாம். 

விற்பனையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இந்த புதிய விதியின் விளைவாக, சிம் கார்டுகளை விற்பனை செய்யும் கடைகள் இப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடையில் பணிபுரிபவர்கள் சிம் கார்டு வாங்கும் நபரின் பின்புலத்தை சரிபார்க்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், ஒவ்வொரு கடைக்கும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

புதிய விதி அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது

சிம் கார்டுகளில் முறைகேடுகளை தடுக்க புதிய விதிமுறைகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. சிம் கார்டு நிறுவனங்கள் தங்களது அனைத்து விற்பனை மையங்களையும் (பிஓஎஸ்) செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும். விதிகளின்படி, பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் சிம் கார்டுகளை விற்கும் கடைகளை கண்காணிக்க வேண்டும். நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்தக் கடைகள் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுகின்றன என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க | இந்த 25 பைசா உங்க வீட்டுல இருக்கான்னு உடனே பாருங்க.. 2 லட்சம் ரூபாய் கிடைக்கும்

கூடுதலாக, அஸ்ஸாம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் சிம் கார்டுகளை விற்கும் கடைகளில் போலீஸ் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது. இதற்குப் பிறகுதான் அங்கு புதிய சிம் கார்டுகளை விற்க அனுமதிக்கப்படுவார்கள்.

சிம் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?

நீங்கள் புதிய சிம் கார்டை வாங்கும்போது, ​​பழைய சிம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, விரிவான சரிபார்ப்பு செயல்முறையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். புதிய சிம் வாங்கும் போது இதே செயல்முறைதான் இருக்கும். புதிய சிம் வாங்குபவர்கள், சிம் தொலைந்துவிட்டதாலோ அல்லது சேதமடைந்ததாலோதான் சிம் வாங்குகிறார்களா என்பதை உறுதி செய்ய இது செய்யப்படுகிறது. இந்த புதிய விதிகளின் நோக்கம் சிம் கார்டுகளைப் பாதுகாக்க உதவுவதும், மோசடி செய்பவர்கள் பல தொலைபேசிகளை அணுகுவதைத் தடுப்பதும் ஆகும்.

முன்னதாக, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகஸ்ட் 17 அன்று வெளியிட்ட அறிக்கையில், முறைகேடுகளைத் தடுக்க, சிம் கார்டு டீலர்களை போலீஸ் சரிபார்ப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளதாகவும், மொத்தமாக 'இணைப்பு' வழங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிம் கார்டு டீலர்களின் சரிபார்ப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். டீலரை நியமிப்பதற்கு முன் ஒவ்வொரு விண்ணப்பதாரரின் விவரங்களையும் சரிபார்ப்பதற்காக அவருடைய வணிகம் தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் சேகரிப்பார்கள். நாட்டில் 10 லட்சம் சிம் கார்டு டீலர்கள் இருப்பதாகவும், அவர்களின் போலீஸ் சரிபார்ப்பைப் பெறுவதற்கு அவர்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

மேலும் படிக்க | தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட் செய்தி: அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News