ஸ்மார்ட்போன்களின் உலகமாக மாறிவிட்ட இன்றைய சூழலில், போன் இல்லாமல் ஒருநாளைக் கடத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் தோழனாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன், சில நேரங்களில் உங்களை அதிகபட்ச கோபத்துக்கும் ஆளாக்கும். அதாவது பேட்டரி சரியாக இல்லாதபோது, நீங்கள் எரிச்சலடைவீர்கள்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டில் பில்லிங் தேதியை மாற்றுவது எப்படி?
தரமான பேட்டரியாக இருந்தாலும், உங்கள் மொபைலில் இருக்கும் சில செயலிகள் பேட்டரியின் தரத்தைக் குறைத்துவிடும். அந்த செயலிகள் பேட்டரியை வெகுவாக குறைத்து, சீக்கிரம் சார்ஜ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளலாம். டிண்டர் முதல் பேஸ்புக் மெசஞ்சர் வரை என சுமார் 20 செயலிகளை வரிசைப்படுத்தலாம். இந்த செயலிகளை நீங்கள் நீக்கிவிட்டால், உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுட்காலம் அதிகரிக்கும்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் லிங்க்ட்இன் போன்ற செயலிகள் உங்கள் தொலைபேசி பின்னணியில் இயங்கிக்கொண்டே இருப்பவை. இவை புகைப்படங்கள், வைஃபை, இருப்பிடம் மற்றும் மைக்ரோஃபோன் ஆகியவற்றை அணுகும் அனுமதியை நாம் கொடுத்திருப்பதால், ஸ்மார்ட்போனின் பேட்டரி வெகுவாக குறையும். இன்ஸ்டாகிராமைப் பொறுத்த வரை டிராக் மோட் ஆப்சன் இருக்கும். இந்த ஆப்சன் போனின் பேட்டரியை வெகு சீக்கிரமாக காலி செய்துவிடும்.
மேலும் படிக்க | Amazon விற்பனை: வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 45% வரை தள்ளுபடி
இதுபோன்று செயலிகளில் இருக்கும் தனித்த அம்சங்களையெல்லாம் நீங்கள் ஆஃப் செய்து வைத்தால் பேட்டரி ஆயுட்காலம் நீடிக்கும். Tinder, Bumble மற்றும் Grinder Top Killer போன்ற ஆப்ஸ் இருந்தால், இன்றே அவற்றை நீக்கிவிடுங்கள். மேற்குறிப்பிட்ட செயலிகளை விட அதிகளவு பேட்டரிகளை தீர்க்கக்கூடிய செயலிகள் இவை. Fitbit, Verizon, ஊபர், ஸ்கைப், பேஸ்புக், ஸ்நாப் சாட், வாட்ஸ்அப், ஜூம், யூ டியூப், அமேசான், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளும் பேட்டரியை விரைவாக தீர்க்கும் செயலிகளாகும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR