Remote Control Ceiling Fans: பனிக்காலம் இன்னும் கொஞ்ச நாள்களில் முடியப்போகிறது. குறிப்பாக, கோடைக்காலம் இன்னும் சில நாள்களில் ஆரம்பிக்கப்போகிறது. தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற பழங்கள் இப்போதே சாலைகளில் உங்களின் கண்களுக்கு தட்டுப்படத் தொடங்கியிருக்கலாம். மதிய வெயிலில் நீங்கள் வெளியே கூட போக முடியாமல், வீட்டிலேயே கூட முடங்கியிருக்கலாம். இவையெல்லாம், கோடை காலம் நெருங்குவதற்கான முக்கிய அறிகுறிகள் என்பது நிச்சயம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.
கோடைகாலத்தில் அனைவரும் தங்களின் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு அதிகமாக தண்ணீர், பழச்சாறு ஆகியவற்றை அருந்த வேண்டும் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல், எப்போதும் காற்றோமான இடங்களிலேயே இருக்க வேண்டும் என்பதும் கோடை காலத்தில் பின்பற்ற வேண்டியவைகளில் ஒன்று. பலரும் கோடை காலத்தை முன்னிட்டு தங்களின் வீட்டிற்கு புதிய ஏசியை வாங்குவார்கள்.
ரிமோட் கண்ட்ரோல் ஃபேன்கள்
ஒருவேளை, ஏசி ஏற்கெனவே இருக்கிறது என்றால் அடுத்த சில மாதங்கள் மட்டும் அதிக மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாவார்கள், காரணம் விடாமல் எந்நேரமும் ஏசி இயங்கிக்கொண்டே இருக்கும். இருப்பினும், சில பேரின் உடலுக்கு ஏசி காற்று ஒத்துவராது. மூச்சு இரைப்பு உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் இருப்பவர்களால் ஏசியில் தூங்கக்கூடாது முடியாது. அவர்கள் எளிமையின் சிகரமாக இருப்பார்கள். வெறும் ஃபேன் காற்றிலேயே தூங்கி, சொர்க்கலோகத்தில் சொப்பனம் காணுவார்கள்.
மேலும் படிக்க | பெரும் அழிவில் சீன மொபைல் துறை..! இந்தியா கொடுத்த பலத்த அடி
அந்த வகையில், அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான செய்தி தற்போது கிடைத்துள்ளது. அதாவது, இப்போதெல்லாம் அனைத்திற்கும் ரிமோட் கண்ட்ரோல் வந்துவிட்ட நிலையில், சீலிங் ஃபேனிற்கும் ரிமோட் கண்ட்ரோல் உள்ளது.
சில பரிந்துரைகள்
இந்நிலையில், அமேசானில் (Amazon Sales 2024) பல ரிமோட் கண்ட்ரோல் சீலிங் ஃபேன்கள் தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது. கோடை காலத்தில் இதன் மவுஸ் இன்னும் எகிறிவிட வாய்ப்புள்ளது என்பதால் உங்களுக்கு தேவை இருப்பினும், இதனை நீங்கள் இப்போதே வாங்கிக்கொள்ளலாம். அது சார்ந்த சிலை பரிந்துரைகளையும் இங்கு காணலாம்.
atomberg Renesa Ceiling Fan
atomberg நிறுவனத்தின் இந்த ஃபேனின் வடிவமைப்பு நேர்த்தியானது மட்டுமின்ரி மிகவும் தனித்துவமானதும் கூட, குறிப்பாக இந்த ஃபேனில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது.
ஃபேனின் பிளேடுக்கு பளபளப்பான மேற்பூச்சு கொடுக்கப்பட்டிருப்பதை காணலாம். இதை ஐஆர் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம். இதில் டைமர், ஸ்லீப் மற்றும் பூஸ்ட் மோட்களும் உள்ளது. இதை ஒரே கிளிக்கில் நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்த ஃபேன் 350 RPM வேகத்தில் காற்றை தரும். இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாக கூறப்படுவது என்னவென்றால், இது 65 சதவீதம் குறைவான மின்சாரத்தையே பயன்படுத்தும் மேலும், இதற்கு 1 வருட வாரண்டி கிடைக்கும். இதன் விலை அமேசானில் 3,499 ரூபாயாகும்.
Havells Saving Ceiling Fan
Havells நிறுவனத்தின் தயாரிப்புகளை பல பேரால் பயன்படுத்தப்படுவதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில், Havells நிறுவனத்தின் இந்த ரிமோட் கண்ட்ரோல் ஃபேனில், இண்டக்ஷன் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மீது அவ்வளவு எளிதில் தூசிப் படியாது, அதற்கெற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மோட்டார் பெயிண்ட் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் 1200 மி.மீ., பிளேடில் ஒரு அலங்கார வளையமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது உங்களின் மின்கட்டணத்தையும் மிச்சப்படுத்தும். இந்த ஃபேனின் விலை அமேசானில் 3,048 ரூபாய் ஆகும்.
Crompton Energion Cromair Ceiling Fan
Crompton நிறுவனம் உங்களுக்கு பரிட்சயப்பட்டதாக இருக்கும். அந்நிறுவனத்தின் இந்த ரிமோட் கண்ட்ரோல் ஃபேன் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. அதாவது, இது மிக குறைந்த மின்சக்தியை பயன்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
ரிமோட் மூலம் அதன் வேகத்தை கூட்டவும் செய்யலாம், குறைக்கவும் செய்யலாம். இதில் 28W அதிவேக மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 350 RPM வேகத்தில் காற்றை வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேன் எளிதில் துருப்பிடிக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு 5 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. அமேசான் தளத்தில் இருந்து இதனை 3,298 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம்.
மேலும் படிக்க | லேப்டாப் அதிகம் ஹேங் ஆகிறதா? இத மட்டும் பண்ணுங்க போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ