ஸ்மார்ட்போனில் சார்ஜ் நிற்கவில்லையா? இந்த முறையில் சார்ஜ் போடுவதை தவிர்க்கவும்!

பொதுவாக ஒரு ஸ்மார்ட்போனின் முக்கியமான பகுதி என்றால் அது பேட்டரி தான், பேட்டரியின் திறன் சிறப்பாக இருந்தால் தான் மொபைலும் நன்றாக இருக்கும்.    

Written by - RK Spark | Last Updated : Feb 16, 2023, 07:29 AM IST
  • மொபைல் கேஸை கழட்டிவிட்டு சார்ஜ் செய்வது பேட்டரியின் ஆயுளுக்கு நல்லது.
  • 5%க்கு கீழ் சார்ஜ் இருக்கும்போது மொபைலை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • மொபைல் கேஸுடன் சார்ஜ் செய்தால் பேட்டரி வெப்பமடைந்து சேதமடைந்துவிடும்.
ஸ்மார்ட்போனில் சார்ஜ் நிற்கவில்லையா? இந்த முறையில் சார்ஜ் போடுவதை தவிர்க்கவும்! title=

ஸ்மார்ட்போனுக்கு முக்கியமான ஒன்று சார்ஜ், நாம் மொபைலுக்கு சார்ஜ் செய்வதில் செய்யக்கூடிய சிறிய தவறுகளால் ஸ்மார்ட்போன் பேட்டரியின் செயல்திறன் மற்றும் ஆயுட்காலத்தில் பாதிப்புகள் ஏற்படுகிறது. உங்கள் ஸ்மார்ட்போன் முடிந்தவரை நீடித்திருப்பதை உறுதி செய்வதற்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் சரியான பேட்டரி பராமரிப்பு முக்கியமானது.  ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது சில விஷயங்களை நாம் பின்பற்றுவதன் மூலம் நமது மொபைலின் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம் மற்றும் சார்ஜிங் வேகத்தை அதிகரிக்கலாம்.  பொதுவாக ஒரு ஸ்மார்ட்போனின் முக்கியமான பகுதி என்றால் அது பேட்டரி தான், பேட்டரியின் திறன் சிறப்பாக இருந்தால் தான் மொபைலும் நன்றாக இருக்கும்.  ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும்போது நாம் செய்யவேண்டிய மூன்று முக்கியமான விஷயங்களை பற்றி காண்போம்.

மேலும் படிக்க | இவ்ளோ காஸ்ட்லி ஃபோன் வெறும் ரூ.999க்கா? அலைமோதும் மக்கள்

1) ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்களிடையே உள்ள பொதுவான பழக்கங்களில் ஒன்று கேஸ் ஆன் செய்யப்பட்ட நிலையில் போனை சார்ஜ் செய்வது.  இதனால் பேட்டரி வெப்பமடைதல் மற்றும் இணைப்பு உடைப்பு போன்ற இரண்டு பிரச்சனைகள் ஏற்படும்.  மொபைல் கேஸ் காரணமாக சார்ஜிங் கனெக்டர் உடைந்து போகலாம் அல்லது சார்ஜர் சரியாக பொருந்தாமல் போய் காலப்போக்கில், இது இணைப்பை பாதிக்கலாம்.  சில சமயங்களில் சார்ஜ் செய்யும் போது மிகவும் சூடாகலாம்.  இது சார்ஜிங் வேகத்தைக் குறைத்து, பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும்.  இந்தச் சிக்கல்களைத் தவிர்க்க உங்கள் மொபைலை சார்ஜ் செய்யும் போது மொபைல் கேஸை நீக்கிவிட்டு சார்ஜ் செய்யுங்கள்.

2) உங்கள் ஸ்மார்ட்போன் 40W அல்லது வேகமான சார்ஜருடன் வந்தால் , அதை தினமும் பயன்படுத்தாமல் இருப்பது முக்கியம், இதனை நீங்கள் பயன்டுத்தினால் மொபைலை வாங்கி பயன்படுத்த தொடங்கிய ஒரு வருடத்திலேயே பேட்டரி கணிசமாக சிதைத்துவிடும்.  இதற்கு பதிலாக ஒரே இரவில் சார்ஜ் செய்ய நீங்கள் பயன்படுத்தும் இரண்டாம் நிலை, மெதுவான சார்ஜரை வைத்திருக்கலாம்.  உங்களுக்கு விரைவான சார்ஜ் தேவைப்படும்போது மட்டுமே வேகமான சார்ஜரைப் பயன்படுத்த முடியும்.  அதேசமயம் ஒவ்வொரு நாளும் அதிவேக சார்ஜரைப் பயன்படுத்துவது உங்கள் பேட்டரியின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி பேட்டரியின் ஆயுட்காலத்தை சிதைத்துவிடும்.

3) உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால் மொபைல் பேட்டரி 5%க்கும் குறைவாக இருக்கும்போது சார்ஜ் ஏற்றுவது.  பொதுவாக மொபைல் பேட்டரி 10-15% இருந்து குறையும் போது பேட்டரி மீது அழுத்தம் ஏற்படுகிறது, ஒவ்வொரு நாளும் இதே அளவில் சார்ஜ் இருக்கும்போது நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் விரைவிலேயே உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி சிதைந்துவிடும்.  இதைத் தவிர்க்க பேட்டரி 15-20% ஆகவும்,  அளவுக்கு குறையாமல் இருக்கும் போதும் உங்கள் போனை சார்ஜ் செய்வது நல்லது.  எப்போதாவது 5%கும் குறைவாக இருக்கும்போது நீங்கள் சார்ஜ் செய்தால் பரவாயில்லை ஆனால் தினமும் இதுபோன்று செய்வது நல்லதல்ல.

மேலும் படிக்க | iPhone-ஐ அடித்து நொறுக்கி ஆப்பு வைக்க வருகிறது Nokia X30 5G: முழு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News