அதிரடி அப்டேட்களுடன் புதிய MacBook Pro மற்றும் AirPods அறிமுகம்

கடந்த மாதம் இந்த நிகழ்வானது புதிய ஐபோன்கள், ஐபேட்கள் மற்றும் ஆப்பிள் வாட்சைக் வெளியிட்டது. இந்த நிகழ்வானது மேக்புக் பிரியர்களுக்காகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2021, 07:14 AM IST
அதிரடி அப்டேட்களுடன் புதிய MacBook Pro மற்றும் AirPods அறிமுகம் title=

இந்த ஆண்டின் ஆப்பிளின் இரண்டாவது ஃபால் நிகழ்வு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கடந்த மாதம் இந்த நிகழ்வானது புதிய ஐபோன்கள், ஐபேட்கள் மற்றும் ஆப்பிள் வாட்சைக் வெளியிட்டது. இந்த நிகழ்வானது மேக்புக் பிரியர்களுக்காகும். இந்த நிகழ்வு Apple.com இல் நேரலையாக நடைபெற்றது. அத்துடன் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாகும் இந்த நிகழ்வின் நேரடி ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. 

புதிய மேக்புக் ப்ரோ:

கடந்த ஆண்டு, ஆப்பிள் இன்டெல் மேக்புக் ப்ரோஸிலிருந்து M1 மேக்புக் (MacBook Pro) ஏர் மற்றும் மேக்புக் ப்ரோஸ் நமக்கு கிடைத்தது. இந்த ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் தனது புதிய சிப்செட்களை அறிமுகம் செய்தது. இவை எம்1 மேக்ஸ் மற்றும் எம்1 ப்ரோ ஆகும். இந்த பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எம்1 மேக்ஸ் மாடலில் 57 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ள. இதில் அதிகபட்சம் 64 ஜிபி யுனிபைடு மெமரி, நான்கு டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 10 கோர்கள் கொண்ட சிபயு மற்றும் 32 கோர்கள் கொண்ட ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது.

ALSO READ | சீனாவைப் போல இந்தியாவிலும் மின்சார நெருக்கடி வருமா? நிலக்கரி இருப்பு குறைவு

புதிய எம்1 ப்ரோ சிப்செட் அதிகபட்சம் 2 டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும். இதில் 32 ஜிபி மெமரி  வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 33.7 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ளன. மேலும் இது 10 கோர் சிபியு மற்றும் 16 ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது. இந்த பிராசஸரும் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மேக் மினி:

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் அன்லீஷ்டு நிகழ்வில் ஆப்பிள் மியூசிக் மற்றும் ஹோம்பாட் பற்றிய அறிவிப்புகளை தொடர்ந்து ஏர்பாட்ஸ் 3 (AirPods) மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, புதிய M1 செயலியுடன் புதுப்பிக்கப்பட்ட மேக் மினியைப் பார்த்தோம். இருப்பினும், தோற்றம் ரீதியாக இது இன்னும் பழைய மேக் மினியைப் போலவே இருந்தது. இந்த ஆண்டு, M1 Xயை இயக்கும் மேக் மினியின் வேகமான மாறுபாடு மற்றும் சில புதிய வடிவமைப்பு குறிப்புகளைக் காணலாம்.

ஏர்பாட்ஸ் 3 இல் உள்ள புதிய சென்சார்கள் இசையின் அனுபவத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 அனைவரின் காதுகளிலும் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அடாப்டிவ் இ.கியூ. அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 விலை 129 டாலர்கள் என துவங்குகிறது.

ALSO READ | உங்கள் வீட்டு கரண்ட் பில் ஷாக் அடிக்கிறதா; இதோ உங்களுக்கான டிப்ஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News