Amazon-Flipkart Sale: கடைசி நாள் ஆஃபரில் ரூ.100க்கும் குறைவாக விற்பனையாகும் பொருட்கள்

அமேசான் - பிளிப்கார்ட் விற்பனையில் கடைசி நாள் விற்பனையில் 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் பொருட்களின் டீல்களை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 30, 2022, 10:19 AM IST
  • அமேசான் - பிளிப்கார்ட் கடைசி நாள் ஆஃபர்
  • ரூ.100க்கும் குறைவான விலையில் கிடைக்கும் பொருட்கள்
  • கடைசி நாள் ஆஃபரை மிஸ் செய்துவிடாதீர்கள்
Amazon-Flipkart Sale: கடைசி நாள் ஆஃபரில் ரூ.100க்கும் குறைவாக விற்பனையாகும் பொருட்கள் title=

Amazon-Flipkart Sale: அமேசான் மற்றும் பிளிப்கார்ட் விற்பனை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், பல பொருட்களுக்கும் இறுதிக் கட்ட ஆஃபரில் அமோகமாக விற்பனையாகின்றன. இரண்டு தளங்களும் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு பொருட்களுக்கு பெரிய தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. இதுமட்டுமில்லாமல் கூடுதல் வங்கிச் சலுகைகள், போனஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸூம் வழங்கப்படுகின்றன. பிளிப்கார்ட்டிலும் இதே போன்ற சலுகைகள் உள்ளன. 

இறுதிக் கட்டத்தில் இருக்கும் ஆஃபரில் ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கும் அதிரடி தள்ளுபடிகளை தெரிந்து கொண்டு, உங்களுக்கு டீல் ஓகே என்றால், அதில் இருக்கும் மற்ற சலுகைகளையும் தெரிந்து கொண்டு உடனே வாங்க முற்படுங்கள். இதுவரை பெரிய பொருட்களின் விலை மற்றும் ஆஃபரை மட்டுமே தெரிந்து கொண்டிருந்த நீங்கள், 100 ரூபாய்க்கும் குறைவான விலையில், இந்த ஆஃபரில் கிடைக்கக்கூடிய பொருட்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மொபைல் கவர் மற்றும் டெம்பர் கிளாஸ்

எந்தவொரு ஸ்மார்ட்போனின் பாதுகாப்பிற்கும் இந்த இரண்டு பொருட்களும் அவசியம். அந்தவகையில் மொபைல் கவர் மற்றும் டெம்பர் கிளாஸை நீங்கள் விரும்பினால், இந்த ஆஃபரில் மலிவான விலையில் நீங்கள் வாங்கலாம். Amazon-Flipkart ஆஃபரில் ரூ.100-க்கும் குறைவான ஆரம்ப விலையில் வாங்கலாம்.

மேலும் படிக்க | Shopping Tips: சரியான ஆஃபர் தேர்ந்தெடுங்கள்; உங்க பணத்தை மிச்சப்படுத்துங்க!

மொபைல் போன் ஸ்டாண்டு

நீங்கள் மொபைலில் படம் பார்க்க விரும்பினால், அப்போது கீழே வைத்து அல்லது எதிரில் வைத்து பார்ப்பதற்கு ஒரு மொபைல் ஸ்டேண்ட்டு வேண்டும். அந்த மொபைல் ஸ்டேண்டுகள் இப்போதைய ஆஃபரில் குறைவான விலையில், அதுவும் 100 ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கிறது. 89 ரூபாய்க்கு நீங்கள் இப்போதைய ஆஃபரில் நீங்கள் வாங்கலாம். 

ஸ்மார்ட்போன் சார்ஜிங் கேபிள்

தொலைபேசியை சார்ஜ் செய்ய, அடாப்டர் மட்டுமல்ல, சார்ஜிங் கேபிளும் தேவை. நீங்கள் புதிய சார்ஜிங் கேபிளை வாங்க விரும்பினால், Amazon-ல் பல விருப்பங்கள் உள்ளன. இங்கிருந்து நீங்கள் வெவ்வேறு வடிவமைப்புகளின் தயாரிப்புகளை 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.

வெப் கேம் கவர்

அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு இந்த பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன் உதவியுடன், உங்கள் மடிக்கணினியின் கேமராவை மறைக்க முடியும். அதாவது, நீங்கள் உளவு பார்க்க மாட்டீர்கள். இந்த தயாரிப்பு அமேசானில் ரூ.59 ஆரம்ப விலையில் கிடைக்கும்.

மேலும் படிக்க | Diwali Festival Offers: டிவி வாங்கினால் ஸ்மார்ட்ஃபோன் இலவசம்..50% தள்ளுபடி கொடுக்கும் சாம்சங்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News