Lava Blaze 2: ரூ. 10,000 -க்கும் குறைவான விலை, விற்பனை ஆரம்பம், முந்துங்கள்

Lava Blaze 2: நேற்று முதல் இந்த போனை அமேசான் இந்தியா மூலம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. போனின் விலை 10,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 19, 2023, 10:14 AM IST
  • லாவா பிளேஸ் 2 மூன்று வண்ணங்களில் வருகிறது.
  • இதன் விலை ரூ.8,999 ஆகும்.
  • இந்த குறைவான விலையிலும் போனில் கிளாஸ் பேக் டிசைன் மற்றும் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே ஆகிய அம்சங்கள் கொடுகப்பட்டுள்ளன.
Lava Blaze 2: ரூ. 10,000 -க்கும் குறைவான விலை, விற்பனை ஆரம்பம், முந்துங்கள் title=

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா நாட்டில் புதிய மாடல்களை தீவிரமாக அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மலிவான 5ஜி தொலைபேசிக்குப் பிறகு, நிறுவனம் அதன் பிளேஸ் தொடரை முன்னோக்கி எடுத்து வருகிறது. நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு முன்பு லாவா பிளேஸ் 2 (Lava Blaze 2) பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ஸ்மார்ட்பொன் பயனர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். 

நேற்று முதல் இந்த போனை அமேசான் இந்தியா மூலம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. போனின் விலை 10,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. எனினும் இதன் அம்சங்கள் அளப்பரியவை. Lava Blaze 2 இன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Lava Blaze 2: இந்தியாவில் இதன் விலை என்ன?

லாவா பிளேஸ் 2 மூன்று வண்ணங்களில் வருகிறது (கிளாஸ் பிளாக், கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் ஆரஞ்ச்). இதன் விலை ரூ.8,999 ஆகும். இந்த குறைவான விலையிலும் போனில் கிளாஸ் பேக் டிசைன் மற்றும் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே ஆகிய அம்சங்கள் கொடுகப்பட்டுள்ளன என்பது ஆச்சரியமான விஷயமாகும். அமேசான் இந்தியா மற்றும் லாவா இந்தியா இணையதளத்தில் இந்த போனை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

மேலும் படிக்க | IRCTC அளித்த முக்கிய அறிவிப்பு: இதை மட்டும் செஞ்சிடாதீங்க

Lava Blaze 2: விவரக்குறிப்புகள்

லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 720 x 1600 பிக்சல்கள் எச்டி+ ரெசல்யூஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், பிளேஸ் 2 ஆனது Unisoc T616 சிப்செட் மற்றும் 6GB LPDDR4X ரேம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 OS இன் ஸ்டாக் பதிப்பில் முன்பே லோட் செய்யப்பட்டிருக்கும். மேலும் இது அநாமதேய அழைப்பு பதிவு அம்சத்திற்கான அணுகலை வழங்குகிறது.

Lava Blaze 2: கேமரா

இந்த லாவா போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் அதன் பின் பேனலில் எல்இடி ப்ளாஷ் உள்ளது.

Lava Blaze 2: பேட்டரி

Lava Blaze 2 ஆனது 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. சாதனம் இரட்டை சிம், 4G VoLTE, Wi-Fi 802.11ac, புளூடூத் 5.0, GPS மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்ற விருப்பங்களை வழங்குகிறது.

மேலும் படிக்க | உஷார்! பாஸ்வேர்டு திருடும் பாஸ் ஜென் - செயற்கை நுண்ணறிவில் இருக்கும் ஆபத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News