நாட்டின் பிரபல டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல்லின் நெட்வொர்க் பல இடங்களில் முடங்கியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்திடம் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஏர்டெல் பயனர்கள் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் சேவையில் சிக்கல்களை எதிர்கொள்வதாக கூறுகிறார்கள். இது குறித்து ட்விட்டரிலும் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இணையத்தை இயக்குவதில் பயனர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது
ஏர்டெல் பயனர்கள் இணையத்தை இயக்குவதில் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏர்டெல் நெட்வொர்க் செயலிழப்பால் இந்த பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
ஆனால் ஊடக அறிக்கைகளின்படி, இந்த பிரச்சனை நாடு முழுவதும் உள்ளது. இது ஏர்டெல் மொபைல் இணைய பயனர்கள் மற்றும் நிறுவனத்தின் பிராட்பேண்ட் மற்றும் வைஃபை சேவை பயனர்களையும் பாதித்துள்ளது.
User reports indicate Airtel is having problems since 11:34 AM IST. https://t.co/Txh31sb3Bnif you're also having problems #Airteldown
— Down Detector India DownDetector February 11, 2022
மேலும் படிக்க | Airtel Xstream Premium அறிமுகம் ஆனது: வெறும் ரூ.149-க்கு 15 ஓடிடி சேவைகள்
11:30 மணி முதல் சர்வர் செயலிழந்துள்ளது
அவுட்டேஜ் டிராக்கர் டவுன்டெக்டரின் படி, ஏர்டெல் இணைய வசதியில் இன்று காலை 11:30 மணி முதல் அதிகப்படியான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற சிக்கலை எதிர்கொள்வது இது இரண்டாவது முறை என பல பயனர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து நிறுவனம் இதுவரை எதுவும் கூறவில்லை.
ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ செயலியை அணுகுவதிலும் சிக்கல் உள்ளது
ஊடக அறிக்கைகளின்படி, ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ செயலியை அணுகுவதிலும் சிக்கல் உள்ளது. இந்த சிக்கலை நிறுவனம் இன்னும் சரி செய்யவில்லை. ஏர்டெல்லின் ஃபைபர் இணையத்திலிருந்து பிராட்பேண்ட் மற்றும் மொபைல் நெட்வொர்க் இணைப்புகளும் செயலிழந்துள்ளன. டெல்லி, மும்பை, நொய்டா உட்பட இந்தியாவின் பல இடங்களில் இந்தப் பிரச்னை உள்ளது.
மேலும் படிக்க | அமேசான் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி !
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR