2023 Kia Seltos Facelift அறிமுகம் ஆனது: விலை, அம்சங்கள், பிற விவரங்கள் இதோ

2023 Kia Seltos Facelift Launch: இந்திய கார் சந்தையில், இது ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹாரியர், ஃபோக்ஸ்வேகன் டைகன் மற்றும் ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 6, 2023, 05:12 PM IST
  • இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று கியா செல்டோஸ்.
  • புதிய செல்டோலில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டிற்கான முன்பதிவுகள் ஜூலை 14 ஆம் தேதி தொடங்கும்.
2023 Kia Seltos Facelift அறிமுகம் ஆனது: விலை, அம்சங்கள், பிற விவரங்கள் இதோ title=

2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்: தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான கியா தனது 2023 செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று கியா செல்டோஸ். புதிய செல்டோலில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய கார் சந்தையில், இது ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹாரியர், ஃபோக்ஸ்வேகன் டைகன் மற்றும் ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது. 

 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்: விற்பனை மற்றும் விலை

புதிய 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டிற்கான முன்பதிவுகள் ஜூலை 14 ஆம் தேதி தொடங்கும். அதன் விலை பின்னர் அறிவிக்கப்படும்.

புதிய செல்டோஸில் முக்கிய அப்டேட்கள்

புதிய செல்டோஸின் மிகப்பெரிய மேம்படுத்தல் ADAS (மேம்பட்ட இயக்கி உதவி அமைப்பு) அம்சமாகும். மேலும் இதில் பனோரமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய ஹெட்லேம்ப் வடிவமைப்பு மற்றும் புதிய டிஆர்எல் -கள் உள்ளன. மேலும் முன் பக்கம் உள்ள பம்பரும் மாற்றப்பட்டுள்ளது. இது தவிர, வாடிக்கையாளர்களுக்கு இதில், புதிய சக்கரங்கள் மற்றும் புதிய டெயில்-லேம்ப் வடிவமைப்பு மற்றும் மிகவும் ஆக்ரோஷமான பின்புற பம்பர் ஆகியவை கிடைக்கும். 

உட்புறத்தைப் பற்றி பேசுகையில், இந்த காரில் புதிய டேஷ்போர்டு வடிவமைப்புடன் இரட்டை திரை அமைப்புடன் (ட்வின் ஸ்க்ரீன் லேஅவுட்) புதிய தோற்றம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். புதிய செல்டோஸில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த காருக்கு புதிய தோற்றம் கிடைக்கிறது. மேலும் இதை கான்ஃபிகரும் செய்துகொள்ளலாம். வழக்கம் போல், இதில் குளிர்ந்த இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய வசதிகளும் உள்ளன. 

2023 கியா செல்டோஸ்: எஞ்சின்

கியா மூன்று எஞ்சின் விருப்பங்களுடன் புதிய செல்டோஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், 1.5லி நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் (115bhp/144Nm), 1.5L டீசல் (115bhp/253Nm) மற்றும் 1.5L டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் நான்கு கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கும். இதில், ஒரு 6-ஸ்பீடு மேனுவல், ஒரு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக், ஒரு 6-ஸ்பீடு ஐஎம்டி மற்றும் ஒரு 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ஆகியவை இருக்கும்.

மேலும் படிக்க | Invicto: மாருதி சுஸுகி இன்விக்டோ பிரீமியம் கார்! ஜூலை 5 இந்தியாவில் அறிமுகம் 

2023 கியா செல்டோஸ்: பாதுகாப்பு அம்சங்கள்

2023 செல்டோஸின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த எஸ்யூவி -யில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் கண்டறிதல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 17 அம்சங்களின் தொகுப்புடன் ADAS லெவல் 2 தொழில்நுட்பம் கிடைக்கிறது. இது தவிர, இதில் 6 ஏர்பேக்குகள் உள்ளன. ரிவர்ஸ் கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார்கள் தக்கவைக்கப்பட்டுள்ளன.

2023 கியா செல்டோஸ்: வண்ண விருப்பங்கள்

புதுப்பிக்கப்பட்ட கியா செல்டோஸ் இரண்டு டூயல் டோன் ஸ்கீம்கள் மற்றும் குறிப்பிட்ட எக்ஸ்-லைன் மேட் பெயிண்ட் ஸ்கீம் உட்பட எட்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

கூடுதல் தகவல்:

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகம் ஆகவுள்ள கார்கள்: 

அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கப் போகிறது. பொதுவாக இந்த காலத்தில் மக்கள் உற்சாகமாக ஷாப்பிங் செய்கிறார்கள், குறிப்பாக ஆட்டோமொபைல் சந்தையில், இந்த சீசனில் மிகுந்த உற்சாகம் இருக்கும். இந்த காரணத்திற்காக, பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இந்த நேரத்தை தேர்வு செய்கிறார்கள். 

ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த பண்டிகை காலத்திலும், ஆட்டோமொபைல் சந்தை நல்ல சலசலப்பைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த முறை சில புதிய கார்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவை ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவற்றில் சில கார்கள் இதோ:

- ஹூண்டாய் எக்ஸ்டர்
- டாடா பஞ்ச் சிஎன்ஜி
- டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்
- டொயோட்டா டெசர்
- ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட்

மேலும் படிக்க | ரூ. 10 லட்சத்தை விட குறைவான விலையில் அறிமுகம் ஆகவுள்ள 5 கார்களின் பட்டியல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News