'விராட் கோலி ஏன் டி20 உலகக் கோப்பைக்கு தேவை...' - வதந்திக்கு கொந்தளித்த Cheeka!

Srikanth On Virat Kohli: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஸ்குவாடில் விராட் கோலி இடம்பெறமாட்டார் என வெளியான தகவலுக்கு கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் கொந்தளித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 15, 2024, 05:30 PM IST
  • ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.
  • மார்ச் 22இல் ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது.
  • விராட் கோலி ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்பதே சந்தேகமாகி உள்ளது.
'விராட் கோலி ஏன் டி20 உலகக் கோப்பைக்கு தேவை...' - வதந்திக்கு கொந்தளித்த Cheeka! title=

Srikanth On Virat Kohli: கிரிக்கெட்டில் தற்போது டி20 திருவிழா தொடங்கியிருக்கிறது எனலாம். ஜூன் மாதம் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரை முன்னிட்டு முன்னணி அணிகள் அதற்கு தயாராகி வருகின்றன. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் 14 அணிகள் கலந்துகொள்கின்றன. டி20 உலகக் கோப்பைக்கு முன் டி20 திருவிழாவான ஐபிஎல் தொடரும் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. 

ஐபிஎல் தொடரின் (IPL 2024) முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் டிக்கெட்டுகள் நாளை முதல் விற்பனை செய்யப்படுகிறது. தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும் விருப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கெனவே பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில், விராட் கோலி இன்னும் பயிற்சிக்கு திரும்பவில்லை.

ஐபிஎல் தொடரை தவறவிடும் விராட் கோலி?

வழக்கமாக அவர் ஐபிஎல் போட்டிக்கு 10 நாள்களுக்கு முன்னரே பயிற்சியை தொடங்கிவிடுவார். ஆனால், அவருக்கு கடந்த மாதம் இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் விராட் கோலி (Virat Kohli) தவறவிட்டார். தொடர்ந்து, விராட் கோலி ஐபிஎல் தொடரின் முதற்கட்ட போட்டிகளை தவறவிடவும் வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை.

மேலும் படிக்க | தோனிக்கு இது கடைசி ஐபிஎல் போட்டியா? டுவைன் பிராவோ முக்கிய அப்டேட்

ஐபிஎல் தொடர் ஒருபுறம் இருக்க, டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணியில் விராட் கோலி சேர்க்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதாவது, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் விராட் கோலியின் ஆட்டத்திற்கு ஏதுவாக இருக்காது என்பதால் அவரை ஸ்குவாடில் சேர்க்க வேண்டாம் என தேர்வுக்குழு தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்களும் சில நாள்கள் முன்னால் வெளியாகின. 

கொந்தளித்த ஸ்ரீகாந்த்...

இதுகுறித்து பல்வேறு வீரர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், 1983இல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவரும், 2011இல் உலகக் கோப்பையை வென்றபோது இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் இருந்த கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் (Krishnamaari Srikanth) கருத்து தெரிவித்துள்ளார். 

அவரது Cheeky Cheeka யூ-ட்யூப் தளத்தில் பேசிய ஸ்ரீகாந்த்,"வாய்ப்பே இல்லை. டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி இல்லாமல் விளையாடுவது சாத்தியமற்றது. 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் நாம் அரையிறுதிக்கு செல்ல உதவியவரே அவர்தான். 2022 டி20 உலகக் கோப்பையின் தொடர் நாயகனே விராட் கோலிதான். யார் இதுபோன்ற கருத்தையெல்லாம் தெரிவிக்கிறார்கள்?

விராட் கோலிக்கு சமர்பிக்க வேண்டும்!

இதுபோன்ற தேவையற்ற வதந்திகளை பரப்புவர்களுக்கு வேறு ஏதும் வேலையே இல்லையா? இதற்கு என்ன அடிப்படை இருக்கிறது. டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் அதில் விராட் கோலி இருக்க வேண்டும். களத்தில் நிலைத்து நின்று விளையாடும் வீரர் உங்களுக்கு நிச்சயம் தேவை.  

டி20 உலகக் கோப்பையோ அல்லது ஓடிஐ உலகக் கோப்பையோ நிலைத்து நின்று விளையாடும் ஒருவர் நிச்சயம் தேவை. விராட் கோலி இல்லையென்றால், இந்திய அணியில் முன்னேற்றம் இருக்காது. விராட் கோலி 100 சதவீதம் இந்திய அணிக்கு தேவை. 2011 ஓடிஐ உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கருக்கு அளிக்கப்பட்ட மரியாதை இந்த டி20 உலகக் கோப்பையில் விராட் கோலிக்கு சமர்பணம் செய்ய வேண்டும்" எனவும் தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க | "பும்ரா, ஹர்திக் பாண்டியா கதை அன்னைக்கே முடிஞ்சிக்கும்" - காப்பாற்றிய ரோஹித் சர்மா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News