மகாவிஷ்ணு என்ன தேச துரோகியா? ஏன் இந்த அவசரம்? சீமான் கேள்வி!

தேச துரோகி போல விமான நிலையத்தில் வைத்து மகாவிஷ்ணுவை கைது செய்தது மற்ற விஷயங்களை மறைப்பதற்குதான்! கூட்டணி குறித்து ஏதும் கூற முடியாது தேர்தல் வர இன்னும் கால அவகாசம் உள்ளது தாவெக கூட்டணி தொடர்பான  கேள்விக்கு சீமான் நழுவல்.  

Written by - RK Spark | Last Updated : Sep 7, 2024, 09:23 PM IST
  • முதலீடு ஈர்க்க சென்ற முதல்வர் சைக்கிள் ஓட்டுகிறார்.
  • முதல்வரின் மகன் சென்னையில் கார் ஓட்டுகிறார்.
  • அமைச்சர் மாசு கொசு ஓட்டுகிறார் - சீமான் சரமாரி விமர்சனம்.
மகாவிஷ்ணு என்ன தேச துரோகியா? ஏன் இந்த அவசரம்? சீமான் கேள்வி! title=

சென்னை திருவொற்றியூர் அடுத்த சாத்தங்காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் புதிய பொறுப்புகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளரை சந்தித்த அவர் கூறியதாவது, எல்லா உயிர்களையும் பேரண்பு கொண்டு நேசிப்பதே ஆன்மீகம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என முன்னரே திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக என்பதை விட பெரிய ஆண்மீகம் இருந்துவிடவாபோகிறது. கால்களை கழுவுகின்ற கோட்பாடு பிஜேபி ஆர்எஸ்எஸ் உடைய கோட்பாடு, இது பள்ளிக்கு எப்படி தெரியாமல் இருந்தது? வெளியே தெரிந்துவிட்டது. இல்லையென்றால் தொடர்ந்தூ நடந்திருக்கும்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் முதன்மையாக பெண்கள் நடத்திய யாகசாலை பூஜை

பெரிய தீவிர வாத செயலை செய்தவர்போல் மகாவிஷ்ணுவை கைது செய்திருந்தது, வேறு ஒரு செய்தியை மறைப்பதற்கு மஹாவிஷ்னு குறித்து தெரியாது என்பதை சொல்வதற்கு ஒருதுறை தேவைதானா? அமெரிக்கா சென்று சைக்கிளிங்செல்லும் முதல்வர் முதலீடுகளை ஈர்த்து வருவாரா? என்ற கேள்விக்கு உடற்பயிற்சிசெய்வது நல்லது தான், ஆனால் கால்நூற்றாண்டூகளாக முதலீடுசடங்கு நடைபெற்று வருகிறது. முதல்வர் சர்வதேச புரோக்கராக மாறி வருகிறார் என சாடினார். வெளி நாட்டில் இருந்துதொழில் தொடங்க வருபவர் தொழில் விவசாய நிலங்களைமட்டுமே எடுத்துக் கொள்வர். கப்பலில் வணிகம் செய்த காலம் மாறி வானூர்தியில் வியாபாரிகளை அழைத்து வருகிறார். 900 கோடி முதலீடு என முதல்வர் கூறும் நிலையில், ஜெகத்ரட்சகன் 908 கோடி அபராதம் மட்டுமே கட்டுகிறார்.

முதலீடு வெளிநாட்டில் இல்லை(ஜெகத்ரட்சன்) இங்கு இருக்கின்றது. 10 லட்சம் கோடி முதலீடு வந்திருந்தால் 9 லட்சம் கோடி கடன் எப்படி இருந்திருக்கும் வரி மின்கட்டணம்மூன்று முறை உயர்ந்துள்ளது. முதல்வர் சைக்கில் ஓட்டுகிறார், முதல்வரின் மகன்கார் ஓட்டுகிறார், மா சுப்மிரமணியன் கொசு ஓட்டுகிறார். எந்த மாநிவத்திலேயும் இல்லாத நச்சு ஆலைகள் தமிழகத்தில் உள்ளது. கடலூர் எண்ணூர் நாகப்பட்டினம் தூத்துக்குடி போன்ற அதிகாரமிலலாத மீனவ கிராமங்களில் தான் நசசு ஆலைகள் இருந்து வருகிறது. முதலாளிகள் வாழ்வதற்கு மனித உயிரை பணையம் வைக்கலாமா? போராடகூடிய மக்களின் வறுமையை பயன்படுத்தி மக்களின் போராட்டங்களை கலைக்கின்றனர். எல்லை தாண்டி கேரள மீனவர்கள் வரும் பொழுது உயிருக்கோ உடமைக்கோ சிறைப்படுத்தபடுவதோ கிடையாது. எல்லை தாண்டுபவன் மீனவன் என்பது பிரச்சனை இல்லை அவன் தமிழக மீனவனாக இருப்பது தான் பிரச்சனை.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாயளுமன்றத்தின் உள்ளே சென்று என்ன செய்து கொண்டிருககிறார்கள். மீண்டும் ஒரு முறை கூறுகிறேன். நான் அதிகாரத்திற்கு வந்தால் எனது மீனவன் கைது செய்யப்பட்டால், பதவியை ராஜினாமா செய்வேன். ஒரே விழா மேடையில் சந்தித்து கொள்ளும் மத்திய மாநில அமைச்சர்கள் இதை பேசி சரி செய்து இருக்க முடியாதா? வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்யும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் மற்றும படகு ஏலம், அப்படி சிறை பிடிக்கும் இலங்கைக்கு போர் கப்பல் பரிசு போர் பயிற்சி தருகிறது இந்திய அரசு. மீனவர்களின் வாக்கு ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் என்ற நிலை இருந்தால் இப்படி இந்த பிரச்சனையை மத்திய நில அரசுகள் விட்டிருக்க வாய்ப்பில்லை. இந்நிலை வட இந்திய மீனவர்களுக்கு நேர்ந்தால் விட்டு விடுவிர்களா?

கார் பந்தயத்தில் இறந்தால் மட்டுமே காவல் அதிகாரியின் மரணம் கண்டுகொள்ளப்பட்டதே தவிர சராசரி பணியில் இருக்கும் போது இருந்திருந்தால் கண்டுகொள்ளப்பட்டிருக்காது. கள்ளச்சாராயம் குடித்து இறப்பவருக்கு இருக்கும் மரியாதை  இராணுவ வீரருக்கு கிடையாது. மகாவிஷ்ணுவை பள்ளிக்குள் அனுமதிக்காமல் இருந்திருந்தாலும் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பார். மாசு கட்டுபாட்டுவாரிய அதிகாரிகள் அனு உலை பாதுகாப்பானது என்றால் அவர்கள் அங்குகுடியிருக்க வேண்டும். மாசு கட்டுபாட்டு வாரீயத்தில் உள்ள மாசுகளை முதலில் நீக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகளுக்காக அரசாங்கம் முன்வராத நிலையில், மக்கள் ஒரு நாள் அதிகாரத்தை கையில் எடுப்பார்கள். தமிழகத்தை பொறுத்தவரை சேவைசெயல் அரசியல் அல்ல, செய்தி அரசியல் தான். இதுவரை தனித்து தேர்தலை சந்தித்து வருகிறோம். தேர்தல் வர இன்னும் காலம் உள்ளது, அப்போது நிலையை பொறுத்துதான் அது என பேசினார்.

மேலும் படிக்க | கிசுகிசு : குடைச்சல் கொடுக்கும் கதர் புள்ளி - கடுப்பில் ஆளும் தரப்பு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News