கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் திமுக சார்பில் திராவிட பாசறை பயிலரங்கம் நடைபெற்றது இந்த பயிலரங்கத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ''இன்றைய தேதியில் இந்திய அளவில் திராவிட சித்தாந்தம் எந்த அளவிற்கு தேவைப்படுகிறது என்பதை எடுத்துறைக்கும் விதமாகவும், இதனை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாகவும் திராவிட பாசறை பயிலரங்கம் நடைபெற்றது.
திராவிடம் என்பது எந்த புள்ளியில் தொடங்கி எந்த புள்ளியில் வளர்ச்சியடைந்தது என்பது குறித்தும், அதன் மையநாடியாக இருக்கக்கூடிய சமூக நீதிக்கொள்கை தமிழகத்தை எப்படி சீரான வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றிருக்கிறது, எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பாதையில் முன்னேறியிருக்கிறது என்பது பற்றி பயிலரங்கத்தில் விவாதிக்கப்பட்டது.'' என கூறினார்.
அப்போது, பெட்ரோல் டீசல் விலையை தமிழக அரசு 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் படிக்க | திருமண பரிசாக வழங்கப்பட்ட தக்காளி மற்றும் விறகடுப்பு!
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், ''சிலிண்டருக்கு ஏற்கனவே மத்திய அரசு கொடுத்து வந்த மானியத்தை முழுமையாக கொடுக்கவில்லை. பிரதமர் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. தேர்தலுக்கு முன் வெளிநாட்டில் இருக்கக்கூடிய கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார். அந்த வாக்குறுதி என்ன ஆனது என தெரியவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று சிலிண்டர் விலை உயர்வு போன்றவை தேவையில்லாமல் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை. இவற்றையெல்லாம் முழுமையாக குறைக்காமல், மத்திய அரசு ஏற்றி வைத்துள்ள விலையை மாநில அரசுகளுக்கு வரக்கூடிய வருவாயை இழந்து விலையை குறைக்க வேண்டும் என்று சொல்வது தேவையற்ற வாதம்.
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை. சென்னையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | இந்திய அணியில் உம்ரான் மாலிக்? பிசிசிஐ யோசனை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR