பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 27 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும். இது அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் 28, 29 தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு... நன்றி தெரிவித்த ஸ்டாலின்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை இல் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) தலா 4, காக்காச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), வொர்த் எஸ்டேட் செருமுள்ளி (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), கயத்தார் ARG (தூத்துக்குடி) தலா 3, க்ளென்மார்கன் (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), கடனா அணை (திருநெல்வேலி), கடம்பூர் (தூத்துக்குடி), கயத்தாறு (தூத்துக்குடி), பாபநாசம் (திருநெல்வேலி), பெரியார் (தேனி), நாலுமுக்கு (திருநெல்வேலி), ராமநதி அணை (திருநெல்வேலி), திருநெல்வேலி AWS தலா 2, ராதாபுரம் (திருநெல்வேலி), கோவில்பட்டி (தூத்துக்குடி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), பார்வூட் (நீலகிரி), திருநெல்வேலி, தென்காசி, குந்தா பாலம் (நீலகிரி), சிவகாசி (விருதுநகர்), ஆயிக்குடி (தென்காசி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
25.01.2023 முதல் 27.01.2023 வரை: பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
28.01.2023: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29.01.2023: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | திமுகவில் மீண்டும் அழகிரி: டிவிட்டரில் போட்ட பதிவால் திமுகவினரிடையே குழப்பம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ