'தமிழகத்தில் தற்போது நடப்பது அதிமுக ஆட்சி அல்ல; பாஜக ஆட்சி'- மு.க.ஸ்டாலின்

பாஜக அரசின் எதிர்மறை செயல்பாடுகள் பற்றி பேச விடாமல் வாய்ப்பூட்டு போடும் முயற்சி கண்டனத்திற்குரியது’ என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

Last Updated : Oct 5, 2019, 01:06 PM IST
'தமிழகத்தில் தற்போது நடப்பது அதிமுக ஆட்சி அல்ல; பாஜக ஆட்சி'- மு.க.ஸ்டாலின் title=

பாஜக அரசின் எதிர்மறை செயல்பாடுகள் பற்றி பேச விடாமல் வாய்ப்பூட்டு போடும் முயற்சி கண்டனத்திற்குரியது’ என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

அமமுகவில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்து, அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த பரணி கார்த்திகேயன் தமது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோரை ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைத்தார். அதற்கான விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தார்.

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முறையாக தேர்தல் நடந்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் என்றும், ஆனால் அப்படி நடக்காததால் நூலிழையில் ஆட்சிப்பொறுப்பேற்கும் வாய்ப்பை தவறவிட்டோம் எனவும் தெரிவித்தார். ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவில் திமுகவிற்கு வெற்றி செய்தி வரும் என நம்பிக்கை தெரிவித்தார்

ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா இல்லை சர்வாதிகார நாட்டில் வாழ்கிறோமா என்ற ஐயம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும், கும்பல் வன்முறையை தடுக்கக்கோரி கடிதம் எழுதியதற்காக 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதை ஏற்கமுடியாது எனவும் ஸ்டாலின் பேசினார். மேலும், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு 49 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் தாம் வேண்டுகோள் விடுப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை எதற்கு உதவாத அரசு உள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை சினிமா படத்தில் இடம்பெற்ற, வரும்..ஆனா வராது என்ற வசனம் தான் தமக்கு நினைவுக்கு வருவதாக கூறினார். மேலும், தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியில்லை, பாஜக ஆட்சி எனக் கூறினார். 

 

Trending News