இருமொழிக் கொள்கைதான் எங்கள் உயிர்: அமைச்சர் ஜெயக்குமார்!

இருமொழிக் கொள்கைதான் எங்கள் உயிர்; தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!!

Last Updated : Jun 7, 2019, 02:40 PM IST
இருமொழிக் கொள்கைதான் எங்கள் உயிர்: அமைச்சர் ஜெயக்குமார்! title=

இருமொழிக் கொள்கைதான் எங்கள் உயிர்; தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!!

மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள புதிய கல்வி குழுவின் வரைவில், மும்மொழி கொள்கை பிரிவில், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி மொழி கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளதற்கு, கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுகுறித்து பலவேறு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்தும், இதற்க்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்க்கு பதிலளித்த ஜெயகுமார் கூறுகையில்; மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் அனுமதிக்கப்படாது என முதல்வர் விளக்கமளித்துவிட்டார். அமைச்சர்களாகிய நாங்களும் கூறியுள்ளோம். பள்ளிக்கல்வித்துறையும் மும்மொழிக்கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

ஆனாலும் திமுக மொழியை வைத்து ஆதாயம் தேடுகிறது. தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் திமுகவினர் தான். நாங்கள் அல்ல. இருமொழிக்கொள்கை தான் எங்களின் உயிர். மக்கள் விரும்பாத மொழியை அதிமுக அரசும் விரும்பாது. திமுக ஆட்சியில் மொழி வளர்ச்சியே இல்லை. ஜெயலலிதா அறிவியல் தமிழை கொண்டுவராமல் இருந்திருந்தால் இன்று கம்ப்யூட்டரில் தமிழை பயன்படுத்த முடியாது. தமிழ்மொழியை பொறுத்தவரை தொட்டான் கெட்டான். ஆககையால் மொழிப்பிரச்சனையில் கை வைக்காமல் இருப்பது தான் நல்லது என அவர் தெரிவித்தார்.  

 

Trending News