சென்னை: நாடு முழுவதும் கொரோனா அச்சம் மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து, இன்னும் சிலரிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் அதுபோன்ற சில சம்பவங்கள் நாடு முழுவதும் சில இடங்களில் நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல், கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் சிலர், இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி மரணமடைந்தனர். அவர்களின் உடலைக்கூட அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உடலை அடக்கம் செய்ய சென்ற 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்களை பொதுமக்கள் தாக்கி உள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்களை அடுத்து மாநில அரசுக்கள், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். உடலை அடக்கம் செய்வதால், யாருக்கும் கொரோனா வைரஸ் பரவாது என்று அறிவிறுத்தி உள்ளனர்.
மேலும் இதுபோன்ற சம்பவங்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது மற்றும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக சுமார் 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இப்படி சோகமான சம்பவம் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும், மறுபுறம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவித்த ஒரு அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி தருவதாகவும், அதை அடக்கம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவேதனையை தருகிறது. கடவுளுக்கு அடுத்தப்படியாக நாம் கருதுவது மருத்துவர்களை தான். மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த கதி என்பது வேதனை அளிக்கிறது.
மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துகொள்ளலாம்.#SpreadHumanity | #COVID19 pic.twitter.com/CG2VLBzj4F
— Vijayakant (@iVijayakant) April 20, 2020