வருமான வரித்துறையினர் மீது விஜய் வழக்கு தொடரலாம்: சுவாமி

வருமான வரித்துறை சோதனை நடத்தியது சரியில்லை என்றால், விஜய் வழக்கு தொடரலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 7, 2020, 12:04 PM IST
வருமான வரித்துறையினர் மீது விஜய் வழக்கு தொடரலாம்: சுவாமி title=

வருமான வரித்துறை சோதனை நடத்தியது சரியில்லை என்றால், விஜய் வழக்கு தொடரலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடிகர், தயாரிப்பாளர், கடன் அளித்தவர்கள், பைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள் என அவர்களுக்கு சொந்தமான 38 இடங்கல் என பல பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் இதுவரை கிடைத்த ரொக்க பணம் மற்றும் ஆவணங்கள் வைத்து பார்த்தால் ரூ.300 கோடி வரை வரிஏய்ப்பு நடந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தனது அறிக்கையில் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிகில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும், பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள் மற்றும் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் சம்மன் கொடுத்து விசாரணையை தொடங்கினர் வருமான வரித்துறையினர். பின்னர் அங்கிருந்து அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து, இரவு முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். 

இந்நிலையில், படப்பிடிப்பில் இருந்து அழைத்து வந்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது சரியில்லை என்றால் விஜய் வழக்கு தொடரலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார். ஒன்றும் இல்லை என்றால் விஜய் ஏன் கவலைப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி சென்னையில் தெரிவித்துள்ளார்.

Trending News