வேலூர்: ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவம் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் வருடம் திருச்சி லலிதா ஜுவல்லரி சுவரில் துளையிட்டு முகங்களில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பிரபல வங்கிக் கொள்ளையன் திருவாரூர் முருகன் லலிதா ஜுவல்லரியில் கைவரிசை காட்டியது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய காவல்துறையினர் மணிகண்டன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து செங்கம் நீதிமன்றத்தில் சுரேஸ் என்பவனும் கொள்ளையர்களுக்கு திட்டம் வகுத்து தந்த முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி நகைகளும் மீட்கப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் சிறை மருத்துவமனையில் 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலன் இன்றி சென்ற வருடம் உயிரிழந்தார்.
நேற்றைய தினம் வேலூர் ஜோஸ்-ஆலுக்காஸ் நகை கடையிலும் அதே பாணியில் சுவரில் துளையிட்டு முகமூடி அணிந்து கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ALSO READ | திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு அதிரவைக்கும் திருப்பங்கள்...
வேலூர் நகரத்தின் முக்கிய பகுதியான தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகில் அமைந்துள்ள பிரபல நகை கடை ஜோஸ்-ஆலுக்காஸ். 5 தளங்களுடன் இயங்கி வரும் இந்த நகை கடையில் சுமார் 15 கிலோ மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று மாலை வடக்கு மண்டல காவல் துறையின் துணை தலைவர் சந்தோஷ் குமார், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் விழுப்புரம் சரக காவல்துறையின் துணைத் தலைவர் பாண்டியன் ஆகியோர் கொள்ளை நடந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
விசாரணைக்குப் பிறகு சந்தோஷ்குமார் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பி தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடையின் சிசிடிவி காமிராவில் மாஸ்க் அணிந்த ஒருவரது உருவம் பதிவாகி உள்ளது. அதனை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார். மேலும் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
ALSO READ | பிரபல நகைக்கடையில் துளையிட்டு கொள்ளை; வடநாட்டு கொள்ளையர்களின் கைவரிசையா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR