சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் (75). இவர் கடந்த 1987ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாதையனுக்கு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர், கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மாதையன் சத்தியமங்கலம் கொலை வழக்கில் தீர்ப்புக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சேலம் மத்திய சிறைக்கும் இங்கிருந்து மீண்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், கடைசி 7 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டு இருந்தார். இப்படியாக கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் மாதையன் இருதய மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவ்வப்போது சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாதையனுக்கு சிகிச்சை பெற சிறை அதிகாரிகள் பரோல் வழங்குவர். இதே போல் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற கடந்த 15 நாட்களுக்கு முன்பு பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
மேலும் படிக்க | ஈரோடு : பூட்டிய வீடுகளில் கில்லாடி தனத்தை காட்டிய தெலுங்கானா தம்பதிகள்!
இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மாதையன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR