Thachankurichi Jallikattu : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கிவைத்தனர்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி அன்னை அடைக்கல மாதா கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழாவினை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். பாதுகாப்பு காரணமாக பலமுறை தள்ளிவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி பல போராட்டங்களுக்கு பிறகு இன்று நடந்தது. இது தமிழ்நாட்டில் இந்தாண்டு நடத்தப்பட்ட முதல் ஜல்லிக்கட்டு போட்டியாகும்.
இந்த போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளுக்கும் ரொக்க பணமும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | புத்தாண்டை வரவேற்ற தச்சாங்குறிச்சி ஜல்லிக்கட்டு! ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு
மேலும் விழா கமிட்டியினர் மாவட்ட நிர்வாகத்தின் அரசு சட்ட திட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு பணிகளை ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த ஜல்லிக்கட்டு போட்டி மிக விறுவிறுப்பான முறையில் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 50 பேர் காயமடைந்துள்ளனர். பலத்த காயமடைந்த எட்டு பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இந்த விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். அப்போது, அங்கிருந்த அதிமுகவினர் சிலர், 'அண்ணன் எடப்பாடியார் வாழ்க' என்று கோஷமிட்டனர். தொடர்ந்து, திமுக சார்பிலும் 'சின்னவர் வாழ்க' என உதயநிதியை குறிப்பிட்டு கோஷம் எழுப்பினர்.
'இது அரசியல் மேடையல்ல, ஜல்லிக்கட்டு மேடை' என்று திமுக மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | செவிலியர்கள் பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு இல்லை - மா. சுப்பிரமணியன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ