அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் அண்ணன் மகன் வெங்கடேஷ் ஆகியோர் அதிமுகவில் இன்று மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Last Updated : Feb 15, 2017, 10:24 AM IST
அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் title=

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் அண்ணன் மகன் வெங்கடேஷ் ஆகியோர் அதிமுகவில் இன்று மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிகமுகவின் அதிகாரப்பூர்வநாளிதழான டாக்டர் நமது எம்ஜிஆர் பத்திரிக்கையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் அதிமுக-வின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தினகரனின் நடவடிக்கைகளுக்கு அதிமுக-வினர் ஒத்துழைப்பு தர வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Trending News