உளுந்தூர்பேட்டையில் விபத்து
நாகர்கோயிலில் இருந்து சொகுசு பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் சென்னைக்குச் சென்று கொண்டிருந்தது இந்த பேருந்தை குமார் என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார். இந்தப் பேருந்தானது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து எந்தவித முன்னெச்சரிக்கை பலகையும் அங்கு வைக்கப்படாமல் இருந்துள்ளது.
பேருந்து பயணிகள் படுகாயம்
இதனை பேருந்து ஓட்டுநரும் கவனிக்கவில்லை. சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பாலம் கட்டுமான பணி தொடர்பான எவ்வித அறிவிப்பு பலகையும் இல்லாததால் தடுப்பு கட்டையில் மோதியுள்ளது. இதில், தலைக்குப்புற கவிழ்ந்து ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுனர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் படுகாயம் அடைந்தவர்களை வைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலருக்கு கை, கால் மற்றும் தலை பகுதிகளில் பலத்த அடி பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கபட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் விபத்து நடைபெற்றதால், தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னையை நோக்கி வந்த பல வாகனங்கள் அப்பகுதியில் வரிசை கட்டி நின்றன. இதனைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீஸார் அங்கு வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விபத்துக்கு முக்கிய காரணம்
தொடர்ந்து இது போல விபத்துக்கள் நடைபெறுவதற்கு காரணம், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணியின் போது முன்னறிவிப்பு பதாகை வைக்காமலே பணி மேற்கொண்டு வருவது தான் என சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த விபத்துக்கு காரணமான நெடுஞ்சாலைத்துறை பணிக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேநேரத்தில், அதிகாலையில் நடைபெற்ற விபத்து என்பதால், பேருந்து ஓட்டுநரின் கவனகுறைவும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | நயினார் நாகேந்திரன் ரூ. 4 கோடி வழக்கு... சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ