டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி வெப்சைட்டில் பார்க்கலாம்.

Last Updated : Jun 7, 2016, 03:20 PM IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி வெப்சைட்டில் பார்க்கலாம். title=

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி நடத்திய வி.ஏ.ஓ குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகிய தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று அதன் ஆணையத்தின் தலைவர் அருள்மொழி கூறியுள்ளார். 2016-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் விரைவில் ஆன்லைன் மூலம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் ஜூன் 5, 2016 சுகாதார வட்டார புள்ளியியல் பிரிவு பணியாளர் தேர்வுகள் நடத்தப்பட்டது. மொத்தம் 887 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் 325 பேர் பரீட்சையும் எழுதினர். தங்களது முடிவுகளை சரிபார்க்க  www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

இணையத்தளத்தில் டி.என்.பி.எஸ்.சி முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது:-

  *  www.tnpsc.gov.in என்ற உத்தியோக பூர்வ இணையதளத்தில் உள்ள நுழையவும்.
  *  அங்கு இருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 2 2016 ஐ கிளிக் செய்யவும்.
  *  பிறகு தங்கள் பதிவு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். 
  *  இப்போது திரையில் தங்கள் முடுவுகள் தோன்றும். 
  *  மேலும் தங்கள் முடிவுகளை பதிவிறக்கம் செய்து ஒரு அச்சு எடுத்து கொள்ளுங்கள்.

Trending News