ஒவ்வொரு வகுப்புக்கும் கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது?

பொதுத் தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளி தொடங்கும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2022, 03:58 PM IST
  • 11ஆம் வகுப்புக்கு 13 நாட்கள் விடுமுறையும், 10 ஆம் வகுப்புக்கு 23 நாட்கள் விடுமுறை.
  • 1 முதல் 9ஆம் வருப்பு வரையான வகுப்புகளுக்கு 30 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வகுப்புக்கும் கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது? title=

தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வரும் மே மாதம் 5-ந்தேதி தொடங்கி மே 28-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.  

அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9-ந்தேதி ஆரம்பித்து மே 31-ந்தேதி வரையும், 10-ம் வகுப்புக்கு மே மாதம் 6-ந்தேதி தொடங்கி மே 30-ந்தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.

இதுதவிர 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13-ந்தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பீஸ்ட் ட்ரைலர் பாக்குறதுக்கு முன்னாடி இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க

இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13-ந்தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. 

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24-ந்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

11ஆம் வகுப்புக்கு 13 நாட்கள் விடுமுறையும், 10 ஆம் வகுப்புக்கு 23 நாட்களும், 1 முதல் 9ஆம் வருப்பு வரையான வகுப்புகளுக்கு 30 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது.

மேலும் படிக்க | திமுகவிற்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும்- அண்ணாமலை சவால்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News