தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் பொள்ளாச்சி வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தன் மீது ஆதாரமில்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தேர்தல் விதிமுறைகளை மீறி வருகிறார். எனவே ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும், எனக்கு மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக்கூறி உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் இதுக்குறித்து மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 16 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்பியது உயர்நீதிமன்றம்.