ஸ்மார்ட் மீட்டர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா; செந்தில் பாலாஜி அளித்த விளக்கம்!

மின்சாரத்துறை சார்பில் ஸ்மார்ட் மீட்டர்களுக்கு எந்தவித கட்டணமும் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட மாட்டாது எனஅமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவு படுத்தினார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 26, 2022, 02:51 PM IST
  • குடிசைகளில் வசிக்கும் மின் நுகர்வோருக்கு எந்தவித ஸ்மார்ட் மீட்டர் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
  • சமூக ஊடகங்களில் அரசியர் தலைவர்கள் சொல்வது ஏற்புடையது அல்ல.
  • விவசாயிகளுக்கு மின் இணைப்பு கேட்டு 4.15 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
ஸ்மார்ட் மீட்டர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா; செந்தில் பாலாஜி அளித்த விளக்கம்! title=

கரூர்: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாதிரி ஜோதியினை கொண்டு செல்லும் விழிப்புணர்வு பேரணியில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாதிரி ஜோதியினை வழங்கி தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்புறம் இருந்து பேரணியை துவக்கி வைத்தார். டிராக் ஹூட்டுடன் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ, மாணவிகளுடன் பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணியானது தலைமை தபால் நிலையம், ஜவகர் பஜார், தைலா கார்னர், வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக சென்று திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. 

அதனை தொடர்ந்து திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற செஸ் போட்டியினை துவக்கி வைத்தார். மாவட்ட முழுவதும் நடைபெற்ற செஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | அதிமுக அலுவலகத்தை சூறையாடியது ஓபிஎஸ் அல்ல - பரபரப்பு கிளப்பும் அதிமுக எம்.பி.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த 2 நாட்களாக பத்திரிக்கைகளிலும், சமூக ஊடகங்களிலும் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வீடுகளுக்கு பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என தவறான கருத்து பகிரப்பட்டு வருகிறது. இது தவறான கருத்தாகும்.

நேற்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மின்வாரிய நிகழ்ச்சியில் நிச்சயமாக வீடுகள், குடிசைகளில் வசிக்கும் மின் நுகர்வோருக்கு எந்தவித ஸ்மார்ட் மீட்டர் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் உள்ள 2 கோடியே 35 லட்சம் மின் இணைப்புகளில் 1 கோடி இணைப்புகளுக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை. 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் 63 லட்சத்து 35 ஆயிரம் பயனீட்டாளர்களுக்கு மாதம் 27 ரூபாயும், 2 மாதத்திற்கு 55 ரூபாய் மட்டுமே கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

சமூக ஊடகங்களில் அரசியர் தலைவர்கள் சொல்வது ஏற்புடையது அல்ல என்றார். எந்த காரணத்தை கொண்டும் ஸ்மார்ட் மீட்டருக்கு மாத கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. கடந்த அதிமுக ஆட்சியில் 1.54 லட்சம் கோடி கடன் தொகையை உயர்த்தியது யார்? அந்த கடன் தொகைக்கு மாதம் 16 லட்சம் கோடி வட்டி கட்டியது யார்? என அடுக்கடுக்காய் கேள்விகளை முன் வைத்தார். மூன்றில் ஒரு பங்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு 3ல் 2 பங்கு மின்சாரத்தை வெளி சந்தையில் அதிக விலைக்கு வாங்கி மின்மிகை மாநிலம் என சொல்லிக் கொண்டனர் என செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார். 

இது குறித்து மேலும் கூறுகையில், விவசாயிகளுக்கு மின் இணைப்பு கேட்டு 4.15 லட்சம் பேர் விண்ணப்பித்து காத்திருந்த போது அவர்களுக்கு மின் இணைப்பு ஏன் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியம் மூடக் கூடிய நிலைக்கு கொண்டு சென்றுவிட்டனர் முந்தைய அதிமுக அரசு. தற்போது மின் கட்டணம் உயர்விற்காக போராட்டம் நடத்தும் அதிமுக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை. அதை கேட்டு போராட்டம் நடத்த திராணி இல்லை என்றார். அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாமல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக எந்த தொகையும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றார்.

மேலும் படிக்க | பாலியல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை. பொறுப்பு பதிவாளர் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News