ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்த நாளை முதல்வர் பன்னீர் செல்வம் டெல்லி செல்கிறார்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
போராட்டத்தைக் கைவிடுமாறு இளைஞர் மாணவர்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள். மாணவர்களின் கோரிக்கை தமிழர்களின் உணர்வை பிரதிபலிக்கின்றன. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசிற்குத்தான் உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கோரி பிரதமர் மோடியை நாளை நான் சந்திக்க உள்ளேன். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என முதல்வர்பன்னீர்செல்வம் கூறினார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைத்து போராடி வருகின்றனர். ஐடி ஊழியர்கள், வணிகர்கள், திரைத்துறையினர் மற்றும் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வரும் 20-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.