திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள ராயநல்லூர் மற்றும் புழுதிக்குடி ஆகிய பகுதியில் விவசாய நிலங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த பின்னர், அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) பெற்றார்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வீட்டு மனை பட்டா, கூரை வீடு பகுதி சேதம், கால்நடை இறப்பு, உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
பின்னர் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் தெரிவித்ததாவது:
கனமழை காரணமாக தமிழக அரசின் நடவடிக்கைகளை அறிந்து இருப்பீர்கள். முதல்வர் ஆகிய நான், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்க பட்டது.
நீர்வளத்துறை ஊரக உள்ளாட்சி துறை சார்பில் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஆட்சிக்கு வந்த உடன் டெல்டா மாவட்டங்களில் 4000கிமீ தூர் வாரப்ப்ட்டது. இதனால் மழைநீர் பெருமளவில் தேங்காமல் தடுக்கப்பட்டது.
உழவர்களை கண் போல் பாதுகாக்கும் அரசு திமுக (DMK) அரசு.
ALSO READ: பயிர் சேதங்களை கண்காணிக்க அமைச்சர்கள் குழு: முதலமைச்சர் அறிவிப்பு!
கடந்த நான்கு மாதங்களில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திற்ககப்டடதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல் மீண்டும் நடிக்க கூடாது என்ற வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சென்னையில் இதுவரை 400 இடஙக்ளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பட்டுள்ளது.
அதிமுக (AIADMK) அரசு செயல்பட்ட விதத்தை மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள். தமிழக அரசு நிரந்தர தீர்வை எடுத்து கொண்டு வருகிறது.
சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு புவியியல் அமைப்பு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தரும்
டெல்டா மாவட்டங்களில் வெள்ள தடுப்பை தடுக்க நிரந்தர தீர்வு எடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களை பொறுத்த வரை தூர் வாரும் பணி நடைபெற்று, அதன் காரணமாக தான் பெருமளவு சேதம் தடுக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு நீட்டிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்த வித பதிலும் இதுவரை வரவில்லை என தெரிவித்தார்.
ALSO READ:கூடலூர் யானைகளை காட்டிற்குள் விரட்ட கோரி தமிழக - கேரள சாலையில் மறியல்!
ALSO READ:இராஜராஜ சோழனின் 1036 வது சதய விழா; தஞ்சையில் விழாக்கோலம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR