இலங்கை தமிழர்களுக்கு இலவச அரிசி; கேஸ் இணைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறிய துறைமுகங்கள் மீதான மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறுகிறது

Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 27, 2021, 11:45 AM IST
இலங்கை தமிழர்களுக்கு இலவச அரிசி; கேஸ் இணைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு title=

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கிய நிலையில், அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு, மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை அடுத்து, 16-ம் தேதியில் இருந்து பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறிய துறைமுகங்கள் மீதான மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறுகிறது. அபோது, விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் (M.K.Stalin), இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும் எனவு அறிவித்துள்ளார். 

ALSO READ | ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீருங்கள் - அதிமுக முன்னாள் எம்பி கோரிக்கை!

முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தப்படும் எனவும், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு இலவசமாக, எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் ரேஷன் கடையில் இலங்கை தமிழர்களுக்கு இலவசமாக அரிசி அளிக்கப்படும் என கூறினார். அத்துடன் இலங்கை தமிழரின் குழந்தைகள் கல்வி மேம்படுத்தும் வகையில் முதல் 50 மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், ஆண்டுதோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ரூபாய் 5 கோடி , கல்விக்காக ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், இலங்கை தமிழர் நலனுக்காக ஆண்டுதோறும் 6 கோடி என 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். 

இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை ரூ.2,500லிருந்து ரூ.10,000 ஆகவும், கலை & அறிவியல் மாணவர்களுகான உதவித் தொகை ரூ.3000ல் இருந்து ரூ.12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுகான உதவித் தொகை ரூ.5000ல் இருந்து ரூ.20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு வார காலத்துக்கு முன்னதாக செப்டெம்பர் 13-ம் தேதியுடன் முடிவடையும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

ALSO READ | தொழிற்படிப்புகளில் 75 சதவீதம் உள்ஒதுக்கீடு– மசோதா தாக்கல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News