தமிழகத்தில் அடுத்த 4 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Oct 25, 2019, 03:50 PM IST
தமிழகத்தில் அடுத்த 4 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!  title=

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடக்கு நோக்கி நகர்ந்து புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு கியார் என பெயரிடப்பட்டுள்ளது. மும்பைக்கு தெற்கு-தென்மேற்கே 380 கிலோமீட்டரில், மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள இந்த புயல், அடுத்த 5 நாட்களுக்கு மேற்கு-வடமேற்கு திசையில் நகரும். இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம், மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது. வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கும், மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 28,29 ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்று தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், அரபிக் கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளதாகவும், வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் கியார் என பெயரிடப்பட்ட புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

 

Trending News