Watch: பட்டியிலனத்தவரை இழிவுபடுத்திய தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்த காவல்துறை

அனைவரும் பவுல்ராஜின் சாதியை குறிப்பிட்டு அவமதித்ததோடு, அவரை சங்கிலி தேவரின் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என மிரட்டி உள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 13, 2020, 03:16 PM IST
  • பவுல்ராஜின் சாதியை குறிப்பிட்டு அவமதித்ததோடு, காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என மிரட்டல்.
  • தேவர் சமூகத்தைச் சேர்ந்தவரின் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்ட பவுல்ராஜின் காணொளி வைரலானது.
  • தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேரை தூத்துக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
Watch: பட்டியிலனத்தவரை இழிவுபடுத்திய தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்த காவல்துறை title=

Thoothukudi News: பட்டியிலனத்தவர் சமூகத்தை சேர்த்தவரை காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என இழிவுபடுத்திய தேவர் சமூகத்தைச் (Thevar Community)  சேர்ந்த ஏழு பேரை தூத்துக்குடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அக்டோபர் 8 ஆம் தேதி நடந்திருந்தாலும், இந்த சம்பவம் குறித்த ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிய பின்னரே, இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து காவல்துறை (Thoothukudi Police) குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து 10 விநாடி வீடியோ ஒன்றை, நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (Viduthalai Siruthikal Katchi ) தலைவருமான தொல். திருமாவளவன் (Thol Thirumavalavan) தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலானதை அடுத்து, பாதிக்கப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு (Kayathar) தாலுகாவில் உள்ள ஓலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பவுல்ராஜ் (60 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சுமார் 100 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

 

ALSO READ | அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? VCK கண்டனம்

சம்பவம் நடந்த நாளில், அவரது ஆடு (Goats) ஒன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சங்கிலி தேவரின் (Sangili Thevar) கொல்லைப் பகுதியில் சென்றதாக் கூறப்படுகிறது. இது சங்கிலி தேவரை கோபப்படுத்தியது. அவர் பவுல்ராஜை (Paulraj) அழைத்து, அவரின் சாதி பெயரைக் குறிப்பிட்டு அவமதித்துள்ளார். அதற்கு பவுல்ராஜ் பதில்கூற, கோபமடைந்த சங்கிலி தேவர் கிராமத்துக்குச் சென்று தனது உறவினர்களான பெரியமாரி (Periyamari) , மகேந்திரன் (Mahendran), மகாராஜன் (Maharajan), உதயம்மால் (Udayammal) மற்றும் வீரையா (Veeraiya) ஆகியோரை அழைத்து வந்தார். அவர்கள் அனைவரும் பவுல்ராஜின் சாதியை குறிப்பிட்டு அவமதித்ததோடு, அவரை சங்கிலி தேவரின் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என மிரட்டி உள்ளனர்.

தேவர் சமூகத்தைச் சேர்ந்தவரின் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்ட பவுல்ராஜின் காணொளி வைரலானது. 

ALSO READ | மொபைல் போனைத் திருடியதற்காக அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பி நுழைத்த சம்பவம்

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்த ஏழு நபர்களுக்கு எதிராக சட்டப்பிரிவு 147, 294 பி, 323 506 (ii), ஐபிசி 3 (1) (r) பிரிவுகளுடன் 3 (1)(s) . பிரிவு 66 கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் (Superintendent of Police) தெரிவித்துள்ளார். இந்த விசாரணைக்கு தலைமை தாங்கி ஏழு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க கோவில்பட்டியின் (Kovilpatti) துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் விசாரித்தார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

ALOS READ | அரசியல் லாபத்திற்கு சாதி வன்முறை வெறியாட்டத்தில் சிதைந்த பொன்பரப்பி கிராமம்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News