தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். தமிழகத்தில் மிகக்குறைந்த அளவில் வாக்குப்பதிவானது நமது சென்னையில் தான் அதாவது 57 சதவீதம் வாக்குப்பதிவானது. இதைக்குறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் 100 சதவித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல முயற்சிகளை செய்து வந்தன. இதற்காக ஏராளமான விளம்பரங்கள் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றது. ஆனால் தமிழகத்தில் மிகவும் குறைந்த சதவீத வாக்குகள் சென்னையில் தான் பதிவாகியுள்ளது.
இதைக்குறித்து நடிகர் ஆர்.ஜே. பாலாஜி "சென்னையில் 57 சதவீதம் தானா? அட போங்கடா டேய். தமிழ்நாட்டில் 100% வாக்குப்பதிவுக்காக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம், விழிப்புணர்வு மற்றும் உழைப்பு எல்லாமே வேஷ்ட். மீதமுள்ள 43 சதவீத மக்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.