வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது!
இதுதொடர்பாக சென்னை வானிலை மைய ஆய்வு அதிகாரிகள் கூறியது:-
தமிழகத்தில் நாகை, திருச்சியில் தலா 101 டிகிரி வெப்பநிலை பதிவானது. தூத்துக்குடியில் 100 டிகிரியும் வெப்ப நிலை பதிவானது. இதையடுத்து, தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்தவகையில் இன்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். மேலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் காற்றுடன், இடி மின்னலும் இருக்கும்.
தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கிறது. திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 30 மி.மீ., ஆலங்குடி, கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.