நிவாரண நிதியாக ₹ 1 கோடி வழங்கிய லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்

சென்னை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் அந்நிறுவன உரிமையாளர் கஜா புயல் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயை முதல்வரிடம் அளித்துள்ளார்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2018, 04:45 PM IST
நிவாரண நிதியாக ₹ 1 கோடி வழங்கிய லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் title=

சென்னை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் அந்நிறுவன உரிமையாளர் கஜா புயல் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயை முதல்வரிடம் அளித்துள்ளார்! 

கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.  எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், புயலால் பதிக்கப்பட்ட மக்களுக்கு பலபகுதிகளில் இருந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இதை தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த, தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன், கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், விவசாயிகள் எக்காரணம் கொண்டும் தவறான முடிவுக்கு செல்ல வேண்டாம் என்றும், கஷ்டமும் நஷ்டமும் எவருக்கும் வரும் அதனை நம்பிக்கையோடு எதிர்க்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் எனக் கூறினார்.

 

Trending News