சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு....!
சென்னை ஷெனாய் நகரில் நிலம் ஆக்ரமிக்கப்பபு தொடர்பாக லட்சுமி என்பவர் உயர்நாதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு குறித்து விசாரணைகள் தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் அடைந்து வருகிறது. விசாரணையின் பொது சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழையும் பெற முடியாத நிலை உள்ளது என்று வழக்கை விசாரித்த நீதிபதி கூறினார்.
அதுமட்டுமின்றி சட்டவிரோத ஆக்ரமிப்புகளை தடுக்க சென்னை மாநகராட்சியிடம் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆக்ரமிப்புகளைத் தடுக்க கடும் நடவடிக்கைள் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அவர் சென்னை மாநகராட்சியில் இருக்கும் ஊழல் குறித்து பல கேவிகளை முன்வைத்தார். இந்நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய எஸ்.எம். சுப்ரமணியம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையடுத்து, மீண்டும் இந்த வழக்கை இன்று இந்த விசாரணை செய்து தீர்ப்பு வழங்கினர்
. அந்த தீர்ப்பில், சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். டிஜிபியுடன் கலந்து ஆலோசித்து புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதிகாரிகளை இடம்மாற்றம் செய்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.