ஊழல் செய்வதில்தான் தமிழக அரசு கவனம்: மு.க.ஸ்டாலின்

Last Updated : May 11, 2017, 12:07 PM IST
ஊழல் செய்வதில்தான் தமிழக அரசு கவனம்: மு.க.ஸ்டாலின்  title=

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து அரசு கவலைப்படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

திமுக ஆட்சியின் போது தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நீர்நிலைகள் முன்கூட்டியே தூர்வாரப்பட்டன என கொளத்தூர் தொகுதியில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை பார்வையிட்டபின் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். 

குடிநீர் தட்டுப்பாடு போக்க நெம்மேலி, மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக கொண்டு வந்தது. அதேபோல் ராமநாதபுரத்தில் ரூ.616 கோடியில் கூட்டுகுடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது என ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக ஆட்சியாளர்கள் ஊழல் செய்வதில்தான் கவனத்தை செலுத்தி வருகின்றனர். 

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா லஞ்சம் கேட்டு பெண் அதிகாரியை மிரட்டியதாக செய்தி வந்துள்ளது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் தாகத்தை போக்க திமுக முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை திமுக தொடர்ந்து மேற்கொள்ளும் என மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

Trending News