தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ”ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கை நிராகரிப்பு
பாரத கலாச்சாரத்தின் மிக முக்கிய திருவிழாவாகவும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் விளங்கும் மஹாசிவராத்திரி தினத்தை ஈஷா கடந்த 25 ஆண்டுகளாக வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசின் சட்டதிட்ட விதிகளை பின்பற்றி, எவ்வித அசம்பாவிதமும் இன்றி இவ்விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்விழாவில் ஜாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், ”ஈஷா மஹாசிவராத்திரி விழாவை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும்” என்ற ஒற்றை நோக்கத்துடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் நேற்று (நவம்பர் 9) தீர்ப்பளித்துள்ளது.
அதில் விழாவுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த பசுமை தீர்ப்பாயம், ”வழக்கம்போல் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதிகள் பெற்று கொண்டு மஹாசிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்” என உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை ஈஷா வரவேற்கிறது.
தமிழகத்தின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக ஈஷா பல ஆண்டுகளாக களத்தில் செயல் பட்டு வருகிறது. பசுமை கரங்கள் திட்டம், நதிகளை மீட்போம் இயக்கம், காவேரி கூக்குரல் இயக்கம் போன்றவை இதில் முக்கியமானவை. நாட்டின் உயரிய சுற்றுச்சூழல் விருதுகளில் ஒன்றான இந்திரா காந்தி பரியவரன் புரஸ்கார் விருது, இந்தியா டுடே நாளிதழின் ‘ஷஃபைகிரி’ விருது, தேசிய தண்ணீர் விருது போன்ற விருதுகள் கிடைத்துள்ளன. மேலும் ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பின் சர்வதேச அங்கீகாரமும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ALSO | காஷ்மீரில் மட்டும் மலரும் குங்குமப்பூ இனி வட கிழக்கு இந்தியாவிலும் பூக்கும்...!!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR