Chennai யூடியூபர் பப்ஜி மதன் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்க கோரியா நிலையில் அதனை அறிவுரைக் கழகம் மறுத்துள்ளது. ஜூலை 6ஆம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில் அதனை தற்போது அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.
மதன் மற்றும் மதன் 18 பிளஸ் ஆகிய யூடியூப் சேனல்கள் மூலமாக தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக் கொண்டு விளையாடியதாக பப்ஜி மதன் மீது புளியந்தோப்பு சைபர் க்ரைம் பிரிவில் இருவர் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜூன் 18-ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கி வரும் அறிவுரைக் கழகத்தில் ஆஜரான பப்ஜி மதன், தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வாதாடினார். "தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை நாங்கள் விளையாடவில்லை. கொரியா வெர்ஷனை தான் விளையாடினோம். மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு மோசமான தவறு எதையும் செய்யவில்லை. சாதாரண பிரிவுகளிலேயே நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என்றும் பப்ஜி மதன் தரப்பில் அறிவுரைக் கழகத்தில் வாதிடப்பட்டது.
ALSO READ ஆபாச வீடியோ வழக்கு; பப்ஜி மதன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
கடந்த 6ம் தேதி அறிவுரைக் கழக நீதிபதிகள் ரகுபதி, ராமன், மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில் இந்த வாதம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் இன்று தனது தீர்ப்பை வெளியிட்ட அறிவுரைக் கழகம், பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உறுதிசெய்துள்ளது. அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததற்கு முகாந்திரம் உள்ளதாகவும் அறிவுரைக் கழகம் தெரிவித்தது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYe