அதிமுக கூட்டணியில் தமாகா-க்கு தஞ்சாவூர் தொகுதி: ஜி.கே.வாசன்

அதிமுக கூட்டணியில் தமாகா கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Last Updated : Mar 14, 2019, 05:45 PM IST
அதிமுக கூட்டணியில் தமாகா-க்கு தஞ்சாவூர் தொகுதி: ஜி.கே.வாசன் title=

அதிமுக கூட்டணியில் தமாகா கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

 மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 

மேலும் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி), தமாகா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தேர்தல் கூட்டணி என்பது வேறு, இயக்கத்தில் கொள்கை என்பது வேறு. எண்ணிக்கை என்பதை விட, எண்ணத்தின் அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களுடைய நலன் கருதி எங்கள் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேட்ட தொகுதியை அதிமுக கொடுத்துள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என தெரிவித்துள்ளார்.

Trending News