சென்னை: சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் (Tamil Nadu State Marketing Corporation Limited) அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என விற்பனை நேரமும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் டாஸ்மாக் (Tasmac) கடைகள் திறக்கும் தமிழக அரசின் (TN Govt) செயலுக்கு பல காட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே கடந்த மே மாதம் 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட போது, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படாததால் அடுத்த நாளே (மே 8) கடைகளி மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது சென்னையில் மீண்டும் டாஸ்மாக் (Tasmac) கடைகள் நாளை முதல் செயல்படும் என தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ALSO READ | குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி..... ஆகஸ்ட் 18 முதல் 10 - 7 மதுக்கடைகள் இயங்கும்!!
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் (Kamal Haasan) , "சாராய அணைக்கட்டின் மதகுகள்? நாளை திறக்கப்படுகிறதா? இது எந்தவிதத்தில் சரி என்ற கோணத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்," காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது.
மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்? எனக் கேள்வியுடன் பதிவிட்டுள்ளார்.
ALSO READ | சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு
ஏற்கனவே திமுக (DMK) உட்பட பல அரசியல் கட்சிகள் சென்னையில் மீண்டும் டாஸ்மாக் (Tasmac) கடைகள் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.