தமிழ்நாட்டுக்கு கருணாநிதி நாடு என பெயர் மாறலாம்: ஜெயக்குமார்

தமிழ்நாட்டுக்கு கருணாநிதி நாடு என்று பெயர் மாறலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 2, 2022, 03:17 PM IST
  • திமுகவை விமர்சிக்கும் ஜெயக்குமார்
  • முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
தமிழ்நாட்டுக்கு கருணாநிதி நாடு என பெயர் மாறலாம்: ஜெயக்குமார் title=

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “அம்மா உணவகங்களை குறைத்து கருணாநிதி உணவகங்களை அதிகரிக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதனை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

தமிழ்நாட்டுக்கு கருணாநிதி நாடு என்றுகூட பெயர் மாறினாலும் மாறலாம். தமிழ்நாடு மக்கள் திமுக மீது வெறுப்பில் உள்ளனர். 

Jayakumar

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்னை உள்ளது. அடுத்த மக்களவைத் தேர்தலில் வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள். 

மேலும் படிக்க | சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம்..மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு ப.சிதம்பரம் ஆதரவு

தமிழ் நமது ஆட்சி மொழியாக உள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. திமுக மும்மொழி கொள்கையை நேரடியாக ஆதரிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான்” என்றார்.

மேலும் படிக்க | ராணிப்பேட்டை: மகன் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் பெற்றோரும் தூக்கிட்டு தற்கொலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News