தமிழக 'ஷவர்மா' கடைகளுக்கு ஆப்பு! கேரள மாணவி மரணத்தின் எதிரோலி!

கேரளா மாணவி உயிரிழப்பையடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள ஷவர்மா விற்பனை கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 5, 2022, 09:09 AM IST
  • 10 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் வீதம் 20 ஆயிரம் ரூபாயை அபராதம்
  • கண்டறியப்பட்டு ஷவர்மா கடைக்கு சீல் வைக்கப்பட்டது
தமிழக 'ஷவர்மா' கடைகளுக்கு ஆப்பு! கேரள மாணவி மரணத்தின் எதிரோலி! title=

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவின் செருவத்தூரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் பள்ளி மாணவ, மாணவிகள் குழுவாக சென்று ஷவர்மா  வாங்கி சாப்பிட்டனர். 

சாப்பிட்ட பின்னர் சுமார் 15 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு   அவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது.

பின்னர் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்  அப்போது ஷவர்மாதான் அவர்களுக்கு ஃபுட் பாய்சனாக மாறியது என தெரியவந்தது. 

மேலும் படிக்க | ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 17 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை

இவர்களில் 14 மாணவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11வது படிக்கும்  பள்ளி மாணவி 
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Kerala Girl Dead

இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில்  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா தலைமையில் 5பேர் என  இரண்டு  குழுவாக  பிரிந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

மேலும், ரங்கசாமி குளம், காவலன் கேட், கீரை மண்டபம், காமாட்சி அம்மன் சன்னதி தெரு,கச்சபேஸ்வரர் கோவில் பகுதி உள்ளிட்ட 13 இடங்களில் இயங்கும் ஷவர்மா விற்பனை செய்யும்  கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஷவர்மா  விற்பனை செய்யும்  கடைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கோழி, ஆட்டு இறச்சிகளில்  பழைய  கறி பயன்படுத்தப்படுகிறதா என சோதனைகள் நடத்தப்பட்டன.

Food Inspection

மேலும் ஷவர்மா செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

இதில்  காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையிலுள்ள காவலான்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் ஷவர்மா விற்பனை  கடைகளில் ஒன்றில் குளிர்சாதனப் பெட்டியில்  பதபடுத்தப்பட்டிருந்த  இறைச்சிகளின் மாதிரிகள் தர பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது.

மாதிரிகள் பின்னர் சென்னை கிண்டியில் உள்ள உணவகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யும் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது.

ஆய்வின்  முடிவுகள் பெறப்பட்டவுடன் அதற்க்கான துறை சார்ந்த மற்றும் சட்ட ரீதியான  நடவடிக்கைகள்  மேற்கொள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் பயன்பாடினை கண்டறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  10 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் வீதம் 20 ஆயிரம் ரூபாயை அபராதமாக  விதித்தனர்.

Food Inspection

மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கச்சபேஸ்வரர் கோவில் அருகாமையிலுள்ள எஸ்.வி.என் பிள்ளை தெரு பகுதியில் செயல்பட்டு வந்த ஷவர்மா விற்பனை கடை ஒன்று உணவு பாதுகாப்பு தரச் சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வந்தது மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் என ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில்  கடை கடையாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படுக்க | வசூல் ராஜா MBBS பட பாணியில் 10 வகுப்பு மாணவனின் ஹை டெக் காப்பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News