Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் பாஜகவிற்கு எத்தனை மக்களவை தொகுதிகள் கிடைக்கும்?

Tamil Nadu Election Result 2024: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியில் திமுக வேப்பாளர் கணபதி ராஜ்குமாரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 4, 2024, 08:33 AM IST
  • இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள்.
  • பாஜக 1-3 இடங்கள் பிடிக்க வாய்ப்பு.
  • பரபரப்பான சூழ்நிலையில் தேர்தல் களம்.
Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் பாஜகவிற்கு எத்தனை மக்களவை தொகுதிகள் கிடைக்கும்? title=

Tamil Nadu Election Result 2024: தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், பாண்டிச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கும் சேர்த்து கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று ஜூன் 4-ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை முதல் தொடங்க உள்ளது. இந்தமுறை பாஜக தமிழகத்தில் தனித்து களம் கண்டது. கடந்த சில தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வந்த நிலையில் இந்த முறை தனியாக நின்றது. இதனால் பாஜகவிற்கு எத்தனை சதவீதம் ஓட்டு வங்கி கிடைக்கும் என்று மக்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். மேலும் திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க பாஜகவின் ஓட்டு நிச்சயம் உதவும் என்று பாஜக தொண்டர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

மேலும் படிக்க | TN Exit Polls : தமிழ்நாட்டில் மாற்றங்கள் நிகழுமா? வெற்றி வாய்ப்பு யாருக்கு? முழு விவரம்..

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் பாஜக நேரடியாக 23 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி 10 இடங்களிலும், தமிழ் மாநில காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட்டன. மேலும், ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக உறுப்பினருமான ஓ பன்னீர்செல்வம் சுயேட்சையாகவும், டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தேனி தொகுதியில் போட்டியிட்ட தினகரன் இந்த தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டார். மேலும் இந்த முறை மக்களவை தேர்தலில் முக்கிய தொகுதிகளாக அண்ணாமலை போட்டியிட்ட கோவை மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்ட சென்னை தெற்கு தொகுதிகள் ஆகியவை இருந்தது. 

அதன்படி, வெளியான கருத்து கணிப்பு முடிவுகளில் தமிழகத்தில் பாஜகவுக்கு 1-3 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. திமுகவிற்கு 33-37 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக தலைமையிலான கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறவில்லை என்றாலும் தங்களது வாக்கு வங்கியை நிரூபித்துவிட்டால் அடுத்த அடுத்த தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் நிச்சயம் சேரும். 

மேலும் படிக்க | Exit Poll முடிவுகளுக்கு திமுக பரபரப்பு ரியாக்சன்... டிகேஎஸ் இளங்கோவன் சொன்னது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News