ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தன்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தெரிவிக்கையில்...
Tamil Nadu cabinet recommends release of 7 convicts of Rajiv Gandhi assassination case. The recommendation will be sent to the TN governor immediately: D Jayakumar, Tamil Nadu minister after TN cabinet meeting in Chennai pic.twitter.com/uxDhO2cUAQ
— ANI (@ANI) September 9, 2018
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தன்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநருக்கு இன்றே பரிந்துரை செய்யப்படும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் MGR பெயரை சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
Tamil Nadu recommends re-naming of Chennai central railway station as MG Ramachandran Central railway station. The cabinet also urges union government to accord 'Bharat Ratna' to former TN CM Jayalalithaa : D Jayakumar, TN Minister pic.twitter.com/4xiiN9dGtL
— ANI (@ANI) September 9, 2018
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் பரிந்துரை செய்யப்படும்
என குறிப்பிட்டுள்ளார்!