மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின் அதற்கான காரணம் தெரிய வரும். தீ விபத்து குறித்து அமைச்சர்கள் உதயகுமார் மற்றும் ராமச்சந்திரன் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் மதுரையில் பொதுமக்களுக்கு, பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.
அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவோர், தங்கள் பணி நேரத்தில் தவறு செய்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்திற்குரிய நியாயமான பங்கை பெற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழக மக்களுக்கு பயன்படாத வகையில் திட்டங்கள் இருந்தால், அதனை தமிழக அரசு தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்று மாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்.
மக்களுக்கு பயன்தராத திட்டங்களை யார் கொண்டு வந்தாலும் தட்டிக் கேட்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு.
கட்சி விதிகளுக்கு மாறாகவும் அதிரகவும் நடந்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சில மாவட்டங்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கு கூடிய சீக்கிரமே பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவவார்கள்.
காவிரி நீரை பெற சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.