கேரள மக்களின் பாதுகாப்பை தமிழகம் உறுதி செய்யும் - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது.கேரள மக்களின் பாதுகாப்பை தமிழ்நாடு உறுதி செய்யுமென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 9, 2022, 04:08 PM IST
  • கேரளாவில் கனமழை பெய்துவருகிறது
  • முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி தமிழக முதல்வருக்கு கடிதம்
  • கேரள மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என ஸ்டாலின் கடிதம்
கேரள மக்களின் பாதுகாப்பை தமிழகம் உறுதி செய்யும் - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் title=

முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது. ஆனால் அந்த அணையின் பராமரிப்பு உள்ளிட்டவை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தச் சூழலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், “கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் இடுக்கி உட்பட கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியாக அதிகரித்து உள்ளது. கனமழை இது போன்று தொடர்ந்தால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயரும். 

இந்த சூழலில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை எதிரொலியாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைத்து பாதுகாப்பான அளவிற்கு நீர் மட்டத்தை பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக கேரள மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் படிக்க | பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம் - அமைச்சர் அறிவிப்பு

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தற்போது கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.அந்த அணையிலிருந்து விதிகளின்படி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு அருகில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்" என அந்தக் கடிதத்தில் பினராயி விஜயனுக்கு உறுதி அளித்துள்ளார்.

மேலும் படிக்க | போதை பொருளை தடுக்க முதல்வர் வேண்டுகோள் - இது ஞாயமா என சீமான் கேள்வி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News