எந்த ஒரு விவகாரத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை வெளியிட கூடாது என்பது அடிப்படையான விஷயம். முன்பு அலட்சியமாக இருந்த ஊடகங்கள் இப்போது இதனை முறையாக கடைபிடிக்கிறார்கள்.
குறிப்பாக டெல்லியில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை மறைக்க அவருக்கு நிர்பயா என பெயரிட்டனர் ஊடகத்தினர். அதே போல் கேரளாவில் ஒரு நடிகை பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டபோதும் அவரது அடையாளங்களை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் வலியுறுத்தியது.
மேலும் படிக்க | One more Nirbaya: என்று தீரும் இந்த நிர்பயா பாணி பாலியல் வன்கொடுமைகள்?
இந்த நிலையில் வேலூரில் கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் சட்டப்பேரவையில் இந்த சம்பவம் தொடர்பாக பேசும்போது அந்த பெண்ணின் பெயர், அவரது ஊர், அவர் பணி செய்யும் இடம், அவரது தொழில், அவரது ஆண் நண்பரின் பெயர் என அனைத்தையுமே வாசித்தார்.
முதல்வர் பேசிய அந்த வீடியோ செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை மூலமாக யூடியூபில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் அறிக்கையின் வாயிலாகவும் இந்த அடையாளங்களை செய்தித்துறை வெளியிட்டுள்ளது. பலாத்காரத்துக்கு ஆளோனோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது என்பதை அரசாங்கம் கூட அறிந்திருக்கவில்லையா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR