39 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டி - பாஜக அதிரடி!

தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்பவர்களுக்கு எங்களது கூட்டணியில் இடமில்லை என்று கே.பி.ராமலிங்கம் கூறி உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Feb 10, 2024, 07:05 PM IST
  • 39 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டி.
  • பாஜக தொண்டர்கள் அதையேதான் விரும்புகின்றனர்.
  • பா.ஜ.க துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி.
39 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டி - பாஜக அதிரடி! title=

மக்களவை தேர்தலில் எங்களுடன் கூட்டணி சேரும் கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுங்கள், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதே தொண்டர்களின் எண்ணம் என்று தமிழக பா.ஜ.க துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் நாமக்கல்லில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.  நாமக்கல்லில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தமிழக பா.ஜ.க துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்திற்கு பின் தமிழக பா.ஜ.க துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மேலும் படிக்க | கோவை கார் வெடிப்பு வழக்கு: 20க்கும் மேலான இடங்களில் என்ஐஏ சோதனை - சிக்கியவர்கள் யார் யார்?

"தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம்.  மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்பவர்களுக்கு எங்களது கூட்டணியில் இடமில்லை என்பது பாஜக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. 2024-ஆம் எம்.பி தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். திமுக, அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு வருவார்கள். முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் பாஜகவிற்கு வந்தது என்பது மோடிக்கு ஆதரவு மற்றும் சமூதாய  பணி செய்யவே என அவர்களே சொல்கின்றார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பவர்கள் எங்களிடம் லேகியம் வாங்கி சாப்பிடுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் இருப்பது 2 அணி தான், அது பாரத பிரதமராக மோடி வேண்டுமா?, வேண்டாமா?. மீண்டும் பிரதமராக மோடி ஆட்சிப் பொறுப்பில் அமருவது உறுதி" என்றார்.

பாஜக கூட்டணி குறித்து அமைச்சர் மனோதங்கராஜ்

பாஜக கூட்டணியில் சேர்வது  தலை வாயில் அகப்பட்டதை போன்று ஆபத்தானது என்று கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் அமைச்சர் மனோதங்கராஜ் கூறியுள்ளார்.  தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கும், அது முதலையில் வியில் அகபட்டதை போன்று ஆபத்தானது. அதிமுக, ஷிண்டே போன்றவர்கள் பட்ட பாடு தெரியும். பல்வேறு மாநிலங்களில் இது போன்ற வரலாறு உள்ளது. அவர்கள் செய்யும் இந்த தவறுக்கெல்லாம் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். பாஜக அரசு மதத்தை வைத்து அரசியில் செய்வது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி பலவீனமடைந்ததாக கூறமுடியாது, கூட்டணியில் சிலர் இருப்பார்கள்.. போவார்கள்.. எங்களை பொறுத்தவரையில் பாஜக பொதுவான எதிரியாக உள்ளது. 

பாஜக எதிராக பல்வேறு மாநிலங்களில் எதிர்பாக மக்கள் உள்ளனர், தேர்தலுக்கு பிறகு பாஜகவிற்கு எதிராக ஒருமித்த கருத்து உருவாகி பாஜக அகற்றபடும்.  திமுக கூட்டணி உறுதியாக வெல்லும், தமிழக பாஜக மண்ணை கவ்வும். திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டுகள் கூறபடுவதை பொறுத்தவரையில் வருமானவரித்துறை, அமலாக்கதுறை, சிபிஐ வைத்துகொண்டு பல்வேறு மிரட்டல்களை செய்கிறார்கள். நீதிமன்றத்தால் தண்டிக்கபட்டவர்கள், பல்வேறு குற்றசாட்டுகளுக்கு உள்ளானவர்கள் பாஜகவில் உள்ளனர். அவர்களை பற்றி பேசபடுவது இல்லை. ஷிண்டை என்ன யோக்கியரா, பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெல்லும் என்ற கருத்துகணிப்பு கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. கடந்த காலங்களில் பல்வேறு கருத்துகணிப்புகள் தவுடுபொடியாகியுள்ளது, மாநிலங்களுக்கு உரிய நிதியை வழங்காததால் டெல்லியில் சென்று பல்வேறு மாநில முதல்வர்கள் போராட்ட வேண்டிய அசிங்கமான நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார். 

மேலும் படிக்க | அதிமுக பாஜக கூட்டணி முறிவு: எடப்பாடி பழனிசாமி தான் உண்மையை சொல்லணும் - அண்ணாமலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News