தமிழ் மக்கள், தமிழ் கலாச்சாரம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது - ஆளுநர் ஆர்.என் ரவி!

தாய் மொழி கல்வியை ஆரம்ப கல்வியில் கொடுப்பதே புதிய கல்விக்கொள்கையின் தாரக மந்திரமாக உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேச்சு.  

Written by - RK Spark | Last Updated : Mar 21, 2023, 07:30 AM IST
  • கோவையில் ஜி.20 மாநாடு நடைபெறுவது நமக்கு பெருமை.
  • இந்த மாநாட்டில் உலகின் இளம் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
  • கோவையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு.
தமிழ் மக்கள், தமிழ் கலாச்சாரம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது - ஆளுநர் ஆர்.என் ரவி! title=

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஜி.20 இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், இந்தியாவின் ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தனர். இந்த மாநாட்டில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கான கூட்டு கல்வி முறை என்ற தலைப்பிலும்,  பெண்களுக்கான அதிகாரம் மற்றும் தொழில் முனைவு என்ற தலைப்பிலும் இளம் தூதுவர்கள் கலந்துரையாடுகின்றனர்.  முன்னதாக இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, கோவையில் ஜி.20 மாநாடு நடைபெறுவது நமக்கு பெருமை. இந்த மாநாட்டில் உலகின் இளம் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  கால நிலை, உணவு, சுகாதாரம், வறுமை, கல்வி மற்றும்பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இந்தா மாநாட்டில் விவாதிக்க உள்ளனர்.

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2023: அதிமுக ஆட்சியில் மாநில வரி வருவாய் கடும் சரிவு - டேட்டா வெளியிட்ட பிடிஆர்

இந்தியாவில் இந்த சவால்களை பிரதமர் திறமையாக எதிர்கொண்டு வருகிறார். கொரோனா  பரவலால் உலகமே பாதிக்கப்பட்டிருந்த சூழலில், இந்தியா தடுப்பூசியை தயாரித்து நம் மக்களுக்கு வழங்கியதோடு, உலக நாடுகளுக்கும் வழங்கியுள்ளது.  இதேபோல் கொரோனா காலத்தில் இ-வித்யா  என்கிற திட்டம் மூலமாக நாடு முழுவதற்கும் இலவச கல்வி வழங்கப்பட்டது.  கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கோவையில் துவங்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியை மின் சக்தியாக மாற்றுவதில் இந்தியா முன்னோடியாக உள்ளது.  தாய் மொழி கல்வியை ஆரம்ப கல்வியில் கொடுப்பதே புதிய கல்விக்கொள்கையின் தாரக மந்திரமாக உள்ளது. கோவையில் நடைபெறும் இந்த மாநாடு மூலமாக அனுபவங்கள் பகிர்வு செய்யப்பட்டு இது உலக அளவில் பிரதிபலிப்பை ஏற்படுத்தும் இவ்வாறு அவர் பேசினார். 

இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, நாம் அனைவரும் கலாச்சாரத்திலும், பண்பாடிலும், இலக்கியங்களிலும் பல ஆயிரம் ஆண்டுகளாக திகழ்ந்து விளங்கும் மாநிலத்தில் இருக்கிறோம். இந்த கல்லூரி மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல்வேரு புதிய புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழ் கலாச்சாரம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.  குறிப்பாக திருவள்ளுவரின் திருக்குறள் என்பது மக்களுக்கு, பல்வேரு கலாச்சாரங்களை கற்று கொடுக்கிறது. அதேபோல் சிலப்பதிகாரம், மணிமேகலை  தொல்காப்பியம், புறநானூறு போல இலக்கியங்களும் நமது கலாசாரங்களை எடுத்துகூறுகிறது.  இயற்கை மனித மோதல் நடந்துவருகிறது. இதனால் தாய் பூமி வெப்பமயமாகி வருகிறது.நதிகள் வறண்டு, வனங்கள் காய்ந்து என பல்வேறு மோதல்கள் மனிதனுக்கும் இயற்கைக்குமான போர் நடந்து வருகிறது.பல நாடுகள் உலகை அழிக்கும் வகையிலான ஆயுதங்களை தயாரித்து வருகிறது.

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2023: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் பிடிஆர் முன் இருக்கும் சவால்கள்..!

புதிய புதிய எலக்ட்ரானிக் உபகரணங்களால் மனிதர்கள் தற்கொலை, மன அழுத்தம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. குறிப்பாக மன உளைச்சல் அதிகளவில் காணப்படுகிறது.நாம் நினைத்து பார்க்க வேண்டும் எப்பது அமைதியான ஆரோக்கியமான உலகை உருவாக்க வேண்டும் என்பதே.  விஞ்ஞானிகளுக்கும் விவசாயிகளுக்கும் நன்றி   உணவு, மற்றும் புதிய கண்டுபிடித்தமைக்கு.கொரோனா காலத்தில் தடுப்பூசிக்காக உலக நாடுகள் திண்டாடி வந்த நிலையில், இந்தியா தடுப்பூசிகளை தயாரித்து அதனை உலக நாடுகளுக்கும் இலவசமாக கொடுத்தது.  நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் பழக்கம் நமது மரபணுவிலேயே உள்ளது. அதுதான் இந்தியா, அதுவே நமது எண்ணம்.வாசு தேவ குடும்பம் என்பது அரசியலுக்காக அல்ல. தமிழில்  கூறப்பட்டுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. இன்னும் சில இடங்களில் வறுமை உள்ளது. உலகில் மக்கள் பசியால் வாடும் நிகழ்வு நடந்து கொண்டுதான் உள்ளது. இந்தியாவை ஒரு குடும்பம் போல பிரதமர் பார்க்கிறார். கொண்டுவரப்படும் திட்டங்கள் ஒவ்வொரு குடிமகனுக்குமானதாக உள்ளது. மாநிலங்களுக்கு மாநிலம் வேறுவடுபதில்லை.  இளம் தலைவர்களான நீங்கள் இந்த மாநாட்டில் கருத்துகளை பகிர்ந்து கொள்வது நிச்சயம் உலகின் வளர்ச்சிக்கு உதவும். இந்த மாநாட்டோடு அல்லாமல், உங்கள் அனைவருக்குள்ளும் தொடர்புகள் இருக்க வேண்டும்.  நாட்டின் வளர்ச்சிக்கும் உங்கள் வளர்ச்சிக்கும் உதவும்இவ்வாறு ஆளுநர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களைன் தலைவர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா, நடிகை கவுதமி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | TN Budget 2023: திமுகவின் திட்டங்களால் கல்வித்துறையின் முன்னேற்றங்கள் - புட்டு புட்டு வைத்த பிடிஆர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News